அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், இந்திய- அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இந்தியா வருகை தந்துள்ளனர்.
இந்தியா மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 2 பிளஸ் 2 என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. காரணம் தெற்காசியாவில் இந்தியா முன்னேறிய சக்தியாக வளர்ந்து வருவதுடன், சர்வ தேச சக்தியாக வளர்வதை அமெரிக்கா வரவேற்கிறது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை கூறியிருப்பதே ஆகும்.
அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், இந்திய- அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இந்தியா வருகை தந்துள்ளனர். இதற்கான கூட்டம் இன்று காலை டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் இந்திய தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். இதில் இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் இரு நாட்டுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பயிற்சி ராணுவம் மற்றும் உளவுத் தகவல் பகிர்வு, ஆயுத உற்பத்தி, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம், ஆயுத விற்பனை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய எல்லையிஇல் சீனா தொல்லை கொடுத்த வரும் நிலையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் வெளியுறவு சம்பந்தமான இந்த பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவது குறித்தும் அமெரிக்க பாதுகாப்பு துறை இந்தியாவுடன் விவாதிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுடன் சீனா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தியா வருகை தந்திருப்பது அவ்விரு நாட்டுக்கும் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.