ஆசிய கண்டத்தில் இனி இந்தியாதான் " தல " ..!! சீனாவை சல்லடையாக்க அமெரிக்க எடுத்த அதிரடி முடிவு..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2020, 12:12 PM IST
Highlights

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இந்திய பாதுகாப்பு துறையுடன் சில முக்கிய ஒப்பந்தங்களை செய்து கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
 

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இந்திய பாதுகாப்பு துறையுடன் சில முக்கிய ஒப்பந்தங்களை செய்து கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 27 அன்று இருநாடுகளுக்கும் இடையில் 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையின்போது அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. அதாவது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லையில் ராணுவ மோதல் இருந்து வரும் நிலையில்  இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற உள்ள இந்த உரையாடல் சர்வதேச அளவில் அதிக கவனம் பெறக்கூடியது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர்.  இதில் அமெரிக்க தரப்பில் இருவரும், இந்திய தரப்பில் இருவர் என பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  இந்த உரையாடல் புதுடில்லியில் நடைபெற உள்ளது. தற்போது அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர். இந்திய தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு  வருகை தந்து எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே  பாதுகாப்புத் துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. 

பேச்சுவார்த்தைக்கு முன் இந்தியாவை பாராட்டியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, ஆசிய கண்டத்தில் இந்தியா ஒரு முன்னணி சக்தியாக வளர்ந்து வருவதாகவும், அது சர்வதேச சக்தியாக உருவெடுப்பதை அமெரிக்கா என்றும் வரவேற்பதாகவும் கூறியுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் அடுத்த கட்ட பயணத்திற்கு அமெரிக்காவின்  ஆதரவு என்றும் உள்ளது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் அமெரிக்கா இந்தியா இடையேயான இராணுவ நுட்பங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி உளவுத் தகவல் பரிமாற்றம் போன்றவைகள் குறித்து  ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

click me!