தேவையில்லாமல் இந்தியர்களை பகைத்துக் கொண்ட ட்ரம்ப் : தலையில் அடித்து கதறும் குடியரசுக் கட்சி..!!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 26, 2020, 1:02 PM IST

மேலும் அமெரிக்காவின் தேசிய  பாதுகாப்புக்கு சீனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் குடியரசு கட்சியின் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.


அதிபர் ட்ரம்ப்புக்கு  முன்னர் இந்திய-அமெரிக்க உறவு வலுவானதாக இல்லை எனவும், ட்ரம்ப் வருகைக்குப் பின்னரே அது வலுவடைந்தது எனவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடியரசு கட்சி தலைவர்  நிக்கி ஹோலி கூறியுள்ளார். உலக வரலாற்றில்

 எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவுக்கும்-இந்தியாவுக்கும் இடையாயான உறவு வலுவடைந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். அதே போல் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்த அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து லட்சக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். 

Tap to resize

Latest Videos

அதற்கு முன்னதாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி-டிரம்ப் ஆகிய இருவரும் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த இரு நிகழ்வுகளும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை வலுவடையச் செய்ததுடன், இருநாடுகளும் உள்ள தோழமையை சர்வதேச நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது, அதேபோல்  இந்திய சீன எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து கூறி வருகிறது. பாகிஸ்தான் விவகாரத்திலும் இந்தியாவுக்கு சாதகமாகவே அமெரிக்கா நடந்து வருகிறது.  இந்நிலையில் அமெரிக்காவில் நவம்பர்-3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. மோடியின் ஆதரவாளர்கள்  ட்ரம்புக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இவை எதையும் பொருட்படுத்தாமல், இந்தியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அதாவது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு இந்தியாவே முக்கிய காரணம் எனவும் அவர் இந்தியாவை விமர்சித்துள்ளார். ட்ரம்ப்பின் விமர்சனம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அமெரிக்க தேர்தலில் இந்திய வாக்காளர்களின் ஆதரவை அவர் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், அவர் இந்தியாவை கடுமையாக விமர்சித்துள்ளது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் குடியரசு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடியரசுக் கட்சித் தலைவரான நிக்கி ஹோலி அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்திற்கு முன்னர் அமெரிக்க இந்திய உறவு ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை, ஆனால் டிரம்புக்கு பின்னரே இரு நாடுகளில் உறவு வலுவடைந்தது என கூறியுள்ளார். 

மேலும் அமெரிக்காவின் தேசிய  பாதுகாப்புக்கு சீனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் குடியரசு கட்சியின் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.அதாவது 2016 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய வம்சாவளியை சேர்ந்த தன்னை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியுறவுத் துறை அமைச்சராக்க விரும்பினார். ஆனால் அதற்கு தான் தயாராக இல்லை. பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை வழங்கினார். பென்சில்வேனியாவில் இந்தியன் வாய்ஸ் ஃபார்  ட்ரம் என்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார். 
 

click me!