பாகிஸ்தான் சரண்டர்...!! பணிய வைத்தது மோடி, அமித்ஷாவின் பலே திட்டம்...!!!

By Asianet TamilFirst Published Aug 31, 2019, 6:45 PM IST
Highlights

என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பியது பாகிஸ்தான். இதனிடையே காஷ்மீர் விவகாரத்தை இம்ரான்கான் முறையாக கையாளவில்லை என அந்நாட்டு எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.  அந்நாட்டு மக்களும் கையாளாகாதவர் இம்ரான் என் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

காஷ்மீர் பிரச்சனையில் கடுமை காட்டிவந்த நிலையில்,  இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு  பாகிஸ்தான் தயாராக உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது,  போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என கூறி வந்த நிலையில் போச்சுவார்த்தைக்கு தயார் என்ற தகவல் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ததாக கருதப்படுகிறது.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவிவந்த  விரிசல் மோதலானது.  இந்தியாவுடன் எந்த ராஜாங்க உறவுகளும் இனி வைத்துக்கொள்ளமாட்டோம் என அதிரடியாக அறிவித்தத பாகிஸ்தான், இந்தியாவுடன் செய்து வந்த வர்த்தக உறவு முதல் தூதரக உறவு வரை அனைத்தையும் முறித்துக்கொண்டது.  இந்தியாவிற்கு எதிராக சர்வதேச நாடுகளை அணியமாக்கும் முயற்ச்சியில் இறங்கி அதில் தோல்வியடைந்தது. அதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற பாகிஸ்தான் இந்தியாவின் மீது போர் தொடுக்க  தயார் என அறிவித்தது.  

இதனிடையே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறும் இந்த பிரச்சனையில் மூன்றாவது நாடுகள் தலையிடுவது சரியாக இருக்காது எனவே இரு நாடுகளும் பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளவதே சரி என கூறி விலகிக்கொண்டன. சர்வதேச அளவில் பாகிஸ்தானின் பேச்சு எடுபடாததால் இந்தியாவை எதிர்க்க வழி தெரியாமல் திகைத்து பாகிஸ்தான். எனவே  இந்தியாவை எச்சரிக்கும் வகையில்  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதணை ஒன்றை நடத்தி பராக்கிரமத்தை காட்டியது பாகிஸ்தான். 

ஆனால் அவை எதையும் கண்டுகொள்ளாமல் இந்தியா புறக்கணித்து விட்டது. ஒரு புறம் சர்வதேச நாடுகளின் புறக்கணிப்பு, மறுபுறம், எடுத்த முடிவில் உறுதியாக நிற்க்கும் இந்தியா. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பியது பாகிஸ்தான். இதனிடையே காஷ்மீர் விவகாரத்தை இம்ரான்கான் முறையாக கையாளவில்லை என அந்நாட்டு எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.  அந்நாட்டு மக்களும் கையாளாகாதவர் இம்ரான்  என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இதனால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல நெருக்கடிக்கு ஆளானார் இம்ரான். எத்தனை எச்சரிக்கைகள் விடுத்தாலும் இந்தியா அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்  உதாசினப்படுத்துவிடுகிறது. இந்தியாவுடன் எழுந்துள்ள முரண்பாட்டால்  அரசியல் ரீதியாகவும் , வரத்தக ரீதியாகவும் பாகிஸ்தான் பெரும் வீழ்ச்சியை சந்தித்துவருகிறது.  இந்த நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்தியாவுடன் நிபர்ந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது எனஅறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன இந்த அறிவிப்பு உண்மையாகும் பட்சத்தில், பாகிஸ்தானின் முடிவு சர்வதேச அளவில் அதி முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருக்கும் என்றே கூறலாம்.  
 

click me!