சிங்கிள்ஸ் படும் அவஸ்தையை பார்த்து காதல் ரயில் விட்ட சீனா... ஓஹோனு கிடைத்த வரவேற்பு!

By Asianet Tamil  |  First Published Aug 31, 2019, 3:21 PM IST

நாட்டில் அதிகமான இளைஞர்கள் காதல் துணையின்றி தவிப்பதால் அவர்களுக்கு "காதல் ரயில்" என்கிற சேவையை சீனா , கம்யூனிச இளைஞர் கழகத்துடன் இணைத்து துவங்கியுள்ளது.


சீன நாட்டில் சுமார் 200 மில்லியன் இளைஞர்கள் காதல் துணையின்றி சிங்கிளாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

Latest Videos

அதன்படி சீனாவின் மேற்கு சாங்கிங் ரயில் நிலையம் முதல் ஆமூர் வரை பயணம் செய்யும் ஒரு ரயிலின் பெயர் ' y999 Love - Pursuit ' அதாவது காதல் கொள்ளும் ரயில் என்று பெயரிடப்பட்டது. இதில் சுமார் 1000 ஆண்கள், பெண்கள் ஒரு முழு இரவு காதல் பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர் என்று கூறுகிறது இன்சைடர் என்கிற பத்திரிகை.

இந்த ரயில் சேவை வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயணித்த 3000 பேரில் 10 ஜோடிகள் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த ரயிலில் பயணம் செய்யும் போது பல்வேறு போட்டிகள் நடத்தப்படுமாம். அதுவும் முழுவதும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து விளையாடும் வகையில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க ஏதுவாகே அப்படி நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

நாட்டில் காதல் துணையின்றி தவிப்பவர்களுக்கு சீனா இப்படி ஒரு அழகான திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இப்படி இருந்தால் ரயில்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்குமோ???

click me!