இந்தியா, சீனாவிடம் வீழ்ந்த அமெரிக்கா..!

india and china overtake america
india and china overtake america


உலக அளவில், கடந்த ஆண்டில் புதிதாக உருவான கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், அமெரிக்காவை இந்தியாவும் சீனாவும் முந்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மற்றும் ஆடிட்டர்கள் அமைப்பு, 2016-ம் ஆண்டில் புதிதாக உருவாகியுள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

Latest Videos

அதன்படி, 2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும், புதிதாக 1550 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் 637 பேர் ஆசியாவையும், 563 பேர் அமெரிக்க கண்டத்தையும், 342 பேர் ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். இதுவரை இல்லாத அளவிற்கு இந்தமுறை அமெரிக்க கண்டத்தை ஆசியா முந்தியுள்ளது.

ஆசியாவில் புதிதாக உருவான கோடீஸ்வரர்களில் 75% பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம், இரு நாடுகளின் மொத்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தமுறை அமெரிக்காவைவிட அதிகரித்துள்ளது.

இந்த புதிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியர்கள் 100 பேர் இடம் பிடித்துள்ளனர்.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image