குஜராத், ஹிமாச்சலில் பாஜக.,வே முன்னிலை பெறும்: கருத்துக் கணிப்பில் தகவல்!

 
Published : Oct 25, 2017, 04:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
குஜராத், ஹிமாச்சலில் பாஜக.,வே முன்னிலை பெறும்: கருத்துக் கணிப்பில் தகவல்!

சுருக்கம்

BJP set to score easy wins in HP Gujarat says survey

குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் குஜராத் மாநில தேர்தல் தேதிகளை அறிவித்தார். முன்னதாக ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, இரு மாநிலத் தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை அறிவித்தது தனியார் அமைப்பு. இந்தியா டுடே- ஆக்சிஸ் ஆகியவை இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கொண்டன. இதில், பாஜக.,வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக., இடையே 10% அளவுக்கு வாக்கு சதவீதம் வேறுபடும் என்று கூறுகிறது.

குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள 182 தொகுதிகளில் பாஜக., 115 முதல்125 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.  
குஜராத்தில் காங்கிரஸ் கூட்டணி 57 முதல் 65 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது அந்தக் கருத்து கணிப்பு. பாஜக., 48% அளவுக்கு வாக்குகளைப் பெறும் என்றும், காங்கிரஸுக்கு 38% அளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிகிறது. இந்தத் தேர்தலில் தற்போது திடீரென புயலைக் கிளப்பி வரும் ஹர்த்திக் படேலால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும்,  ஹர்திக் பட்டேல் ஒருவேளை காங்கிரசுக்கு ஆதரவு அளித்தால், அக்கட்சி கூடுதலாக 7 இடங்கள் வரை  வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறது. 

கடந்த 2012ல் நடைபெற்ற தேர்தலில், அப்போதைய முதல்வராக நரேந்திர மோடி முன் நிறுத்தப் பட்டார். அப்போது, பாஜக.,வுக்கு 115 இடங்களும் காங்கிரஸுக்கு 61 இடங்களும் கிடைத்தன. 

இந்த சர்வேயின் போது சில கேள்விகளும் முன் வைக்கப்பட்டன. அதன்படி, ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதால் 38 சதவீதம் பேர் நன்மை ஏற்பட்டுள்ளதாக  ஆதரவு தெரிவித்துள்ளனர். பண மதிப்பிழப்பால் 44 சதவீதம் பேர் பலன் ஏற்பட்டுள்ளது என்றும் 53 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

மோடி பிரதமராக இருப்பதால் குஜராத் பலன் பெற்றுள்ளதாக 66 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 31 சதவீதம் பேர் பெரிய பலன் இல்லை என்றுகூறியுள்ளனர். மோடி அரசு நல்லது, மிக நல்லது செய்திருப்பதாக 74% பேர் கூறியுள்ளனர். 

அதுபோல், தேர்தல் நடைபெறும் இன்னொரு மாநிலமான ஹிமாசலப் பிரதேசத்தில் நவம்பர் 8 ஆம் தேதி  தேர்தல் நடக்கிறது.  68 சட்டசபை தொகுதிகள் உள்ள ஹிமாசலப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா  43 முதல் 47 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 21 முதல் 25 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

PREV
click me!

Recommended Stories

விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!