காரில் போகும்போதே மேக்-அப் போட்டுக் கொண்டு  போன பெண்ணுக்கு என்னாச்சு பாருங்க…..பெண்களே உஷார் ...

 
Published : Jun 19, 2018, 08:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
காரில் போகும்போதே மேக்-அப் போட்டுக் கொண்டு  போன பெண்ணுக்கு என்னாச்சு பாருங்க…..பெண்களே  உஷார் ...

சுருக்கம்

In thailand a girl injured at the time get make up

பாங்காங் நகரைச் சேர்ந்த  பெண் ஒருவர், காரில் மேக்-அப்  போட்டுக் கொண்டே  போகும் போது  ஐ புரோ பென்சில் கண்ணில் குத்தி படுகாயம் அடைந்தார். நல்லவேளையாக  அவருக்கு கண்பார்வை பாதிக்கப்படவிலை.

பொதுவாக பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும போதோ அல்லது விழாக்களுக்குச் செல்லும் போதோ வீட்டிலேயே ரெடியாகாமல் போகும் வழியில் மேக்-அப் போட்டுக் கொண்டு செல்லும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு தாய்லாந்தில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

தாய்லாந்தில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டிக்கொண்டிருந்தபோது காரின் பின்சீட்டில் இருந்த அந்த இளம்பெண் தனது கண்புருவத்தையும் கண்ணையும் அழகுபடுத்த கருப்பு பென்சிலால் மையிட்டு கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத வகையில் அவர் சென்று கொண்டிருந்த கார் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றின் மீது திடீரென மோதியது. இதனால் பென்சிலால் கண் மை போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் இடது கண்ணுக்குள் அந்த பென்சில் குத்தி சொருகி கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது டிரைவர் உடனடியாக அந்த பெண்ணை வேறொரு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு அவருடைய கண்ணில் இருந்து அந்த பென்சிலை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கண் பார்வைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

PREV
click me!

Recommended Stories

விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!