மூன்று நாட்களுக்கு முன்பு  காணாமல் போன பெண்! 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் சடலமாக மீட்பு!?

Asianet News Tamil  
Published : Jun 18, 2018, 03:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
மூன்று நாட்களுக்கு முன்பு  காணாமல் போன பெண்! 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் சடலமாக மீட்பு!?

சுருக்கம்

Missing Indonesian Womans Body Found in Belly of 23 Foot Giant Python

காணாமல் போன  பெண்ணை 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வாதிபா. கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற வா திபா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த கிராமத்தில் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.  வாதிபாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரை தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் ஆனநிலையில் உறவினர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் 23 அடி நீள மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாமல் தினறிக்கொண்டு உருண்டு சென்றது.   இதை பார்த்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்து  மலைப்பாம்பின் வயிற்று பகுதியை வெட்டி பார்த்து உள்ளனர். அப்போது வாதிபாவின் சடலம் உள்ளே இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்தனர்.

இதற்கு முன்பாக மலைப்பாம்பு எங்கும் செல்லாமல், உருண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள், மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வாதிபாவின் செருப்பு கிடந்து உள்ளது. அவருடைய தலையை முதலில் விழுங்கியுள்ள பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்து உள்ளது. வாதிபாவின் பூச்செடிகள் நிரம்பிய தோட்டம், செங்குத்தான பாறைகள், குகைகள் என கரடு முரடான பகுதியில் உள்ளது. அங்கு பாம்புகள் நடமாட்டம் என்பது சாதாரணமானது என உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

வேலை இல்லனு கவலையே வேண்டாம்! ஓமன் சுல்தான் வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு!
இனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!