பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவி தனது கணவரின் ஆணுறுப்பை கத்திரிக் கோலால் வெட்டி எறிந்த செயல் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் பெங்செங் நகரை சேர்ந்தவர் லீ. இவருக்கு அண்மையில் பதிய வேலை ஒன்று கிடைத்தது. வேலை முடிந்து கணவள் நாள்தோறும் வீட்டுக்கு லேட்டாக வருவதாக நினைத்த அந்த மனைவி தனது கணவன் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை ஏமாற்றுகிறார் என நினைத்துள்ளார்
இதனை தொடர்ந்து மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும், மற்ற பெண்களிடம் பேச கூடாது, அவர்கள் தொலைபேசியில் பேசினால் பதிலளிக்க கூடாது என்றும் மனைவி கண்டிப்புடன் கூறியுள்ளார். பெண்களை நோக்கி சிரிக்கவும் கூடாது என மனைவி உத்தரவிட்டார்.
இதற்கு பிறகும் கணவன் மீது மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம் குறையவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் குளியலறைக்கு கணவன் சென்றுள்ளார். ஆடைகளின்றி நிர்வாண நிலையில் இருந்த அவரை நெருங்கிய மனைவி தன்னிடம் இருந்த கத்திரிக்கோலால் ஆணுறுப்பினை துண்டித்து விட்டார்.
இதனால் வலியால் துடித்துப் போன கணவர் அலறியுள்ளார். தொடர்ந்து ரத்தம் வழிந்தோட அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து விட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெற்றார்.
அதன்பின் மருத்துவர்கள் அவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து முடித்தனர். ஆனால் சிகிச்சைக்கு பின் மிக கவனமுடன் , அதாவது மிக, மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்