வாட்ஸ்ஆப் குரூப் வீடியோ காலில் 4 பேர் ஒரே நேரத்தில் பேசக்கூடிய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஸ்மார்ட்ஃபோன் உலகில், வாட்ஸ்ஆப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க முடியாது. நாளுக்கு நாள் வாட்ஸ்ஆப் உபயோகிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் வாட்ஸ்ஆப் இன்றி ஒரு நபரின் சராசரி பொழுது போவது மிக அரிது. வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் செய்வதில் பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், வாட்ஸ்ஆப் குரூப் வீடியோ கால் வசதியில் புதிய வசதிகளை, வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 4 பேர் ஒரே நேரத்தில் வீடியோ கால் மூலமாகப் பேசுவது முக்கியமான வசதியாகும். இது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள், அடுத்த சில நாட்களில் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். முதலில், உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கம் வாட்ஸ்ஆப் செயலி மூலமாக, ஒரு வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் செய்யவும்.
இரண்டாவதாக, add participant என்ற பட்டனை கிளிச் செய்து, உங்களுக்கு விருப்பமான நபர்களை சேர்க்கலாம். பின், எளிமையாக நீங்கள் சேர்க்க வேண்டிய மற்ற நபர்களை அதில் இருக்கும் சர்ச் பாக்ஸ் மூலமாக தேர்வு செய்யுங்கள். மூன்றாவதாக, குரூப் வாய்ஸ் அல்லது குரூப் வீடியோ கால் வரும்போது உங்கள் ஸ்மார்ட்போன் திரையின் அழைப்பில் பார்க்க முடியும். பின்பு குரூப் வாய்ஸ் கால் அம்சத்தை வீடியோ கால் ஆக மாற்ற முடியாது.
நான்காவது அம்சமாக, குரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும்போது நாம் சேமித்து வைத்துள்ள எண்களை எடுக்க முடியாது. ஐந்தாவதாக, குரூப் வாய்ஸ், வீடியோ கால் வசதியில் கால் ஹிஸ்டரியை பார்க்கும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் வாங்கியுள்ளது. இறுதியாக, குரூப் வீடியோ கால் செய்யும்போது, கேமிராவை ஆஃப் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.