
புற்றுநோய் பாதித்த காதலன்….உயிர்போகும் நிலையில் திருமணம் செய்து கொண்ட காதலி…நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்…
இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலனை மருத்துவமனையிலேயே காதலி திருமணம் செய்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ரே கெர்ஷா என்பவருக்கும் ட்ரேசி க்கும் அடுத்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரே கெர்ஷாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெர்ஷாவை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்ததால், கெர்ஷா இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டவுனேயே ரே கெர்ஷாயும் ட்ரேசியும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலிக்கத் தொடங்கினார். காதல் சிட்டுகளாய் பல இடங்களில் சுற்றித்திரிந்த இந்தப்பறவைகளுக்கு புற்றுநோய் குறித்த தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது.
ஆனாலும் மனத் தளராத மணமகள் ட்ரேசி, ஒரு ஆச்சரியத்தக்க முடிவை எடுத்தார். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது போல ஷெர்ஷாவை மணமுடிக்கப் போவதாக அறிவித்தார்.
இந்த முடிவு ட்ரேசியின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் அதை வரவேற்றனர்.
ஷெர்ஷாவினால் மருத்துவமனையிலிருந்து வெளியே வர முடியாது என்பதால், மருத்துவமனையிலேயே இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் வெறும் 24 மணி நேரத்தில் செய்யப்பட்டன.
ஷெர்ஷாவின் நிலை குறித்து அறிந்த பல தன்னார்வலர்கள், இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளையும், பரிசுப் பொருட்களையும் அன்பளிப்பாக அளித்தனர்.
இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழப்போவது தெரிந்தாலும், இந்த திருமணம் ஷெர்ஷாவுக்கு மன நிம்மதியை அளிக்கும் என மணமகள் ட்ரேசி தெரிவித்துள்ளார்.