வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறி, பிரதமர் ராஜினாமா செய்து ராணுவ ஆட்சிக்கு வழிவகுத்தது. இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து, #AllEyesOnHindusInBangladesh டிரெண்டாகிறது.
வங்கதேசத்தில் அரசு பணிகளுக்கான இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொங்கிய மாணவர் போராட்டம் மாபெரும் கிளர்ச்சியாக வெடித்தது. தொடர் வன்முறையால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். அவரைத் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் இடைக்கால ஆட்சியை நிறுவியது. அதன் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். தலைநகர் டாக்காவில் தொடர்ச்சியான வன்முறைகள் அறங்கேரிவருகிறது. குறிப்பாக இந்து சமூகத்தை குறிவைத்து. #AllEyesOnHindusInBangladesh என்ற ஹேஷ்டேக்கு டிரெண்டாகி வருகிறது.
காசா மோதலின் போது முந்தைய உலகளாவிய பிரச்சாரமான #AllEyesOnRafah டிரெண்டானது. இருப்பினும், இப்போதை புதிய ஹேஷ்டேக் வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் எதிர்கொள்ளும் கொடூரமான சம்பவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போராட்டமும் அரசியல் களமும்!
1971 வங்கதேச விடுதலைப் போரில் இருந்து உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதத்தை ஒதுக்கும் ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இடைவிடதா போராடத்தால் இது பரவலான வன்முறைக்கு வழிவகுத்தது.
ஆட்சி கவிழ்ந்து, இடைக்கால அரசு பதவியேற்ற பின்னரும் நாட்டில், தற்போதைய அரசியல் சூழலில் இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. கனடாவிலிருந்தும்,
அமெரிக்கா ஆஸ்திரேலியாவில் இருந்தும் வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு கோரி, உலகம் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டன. இந்த உலகளாவிய கூக்குரல் சமூக ஊடகங்களில் #SaveHindusInBangladesh பிரச்சாரத்தின் ஹேஷ்டேக்-ஐ டிரெண்டாக்கியுள்ளது.
இந்துக்கள் & கோவில்கள் மீது தாக்குதல்!
சேதப்படுத்தப்பட்ட கோயில்கள், அழிக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகள், இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், இந்துக்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏராளமான மக்கள் இந்தியாவில் தஞ்சம் தேடி எல்லைகளில் குவிந்துள்ளனர்.
மேலும், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் என்பது தனிப்பட்ட தாக்குதல் அல்ல, இதற்கு ஓர் ஆழமான காரணங்கள் உண்டு. 1971 இல், வங்காளதேசத்தின் சுதந்திர போரின்போது சுமார் 2.5 மில்லியன் இந்துக்கள் பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். அப்போதிலிருந்து, இந்துக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன. 2013 முதல் தற்போது வரை சுமார் 3,600 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.