குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான் கான் எதிர்ப்பு: பாஜக பதிலடி ...

By Selvanayagam P  |  First Published Dec 11, 2019, 8:38 AM IST

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு இம்ரான் கான் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தற்கு பா.ஜ.க. தலைவர் சிவராஜ் சிங் சவுகான் வித்தியாசமாக டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
 


இந்திய நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இம்ரான் கான் தனது  டிவிட்டரில், சர்வதேச மனித உரிமை சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும், பாகிஸ்தானுடனான இருதரப்பு ஒப்பந்தங்களையும் மீறும் இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். 

Latest Videos

இது பாசிச மோடி அரசாங்கத்தால் பிரச்சாரம் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்து ராஷ்டிரா வடிவமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும் என டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். 

இம்ரான் கானின் பதிவுக்கு மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், அம்மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் வித்தியாசமாக பதில் அளித்துள்ளார். தற்போது அது டிவிட்டரில் பரபரப்பாகி வருகிறது.

இம்ரான் கானின் டிவிட்டுக்கு, சிவராஜ் சிங் சவுகான், கண்ணீர் விட்டு சிரிக்கும் ஈமோஜிகளை பதிவு செய்து பதில் டிவிட் செய்துள்ளார். அதாவது குடியுரிமை மசோதா குறித்து இவரெல்லாம் பேசுகிறார் என கிண்டல் செய்து அந்த ஈமோஜிகளை பதிவு செய்து இருந்தார். சிவராஜ் சிங் சவுகானின் ரீப்ளே டிவிட் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி உள்ளது.

click me!