ரேடார் திடீர் துண்டிப்பு... நடுவானில் 38 பேருடன் மாயமான ராணுவ விமானம்... தேடும் பணிகள் தீவிரம்..!

By vinoth kumarFirst Published Dec 10, 2019, 4:32 PM IST
Highlights

சிலி நாட்டில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்றுக்கொண்டிருந்த ராணுவ விமானம் திடீரென மாயமாகியுள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கி 38 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சிலி நாட்டில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்றுக்கொண்டிருந்த ராணுவ விமானம் திடீரென மாயமாகியுள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கி 38 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 

ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த அந்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 4.55 மணியளவில் புறப்பட்டுச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 17 விமானக் குழுவினர் மற்றும் 21 பயணிகள் உட்பட மொத்தம் 38 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, விமானம் விபத்தில் சிக்கி 38 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா, விமானம் மாயமானது குறித்த தகவல் அறிந்ததும் தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், நிலமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

click me!