உலகின் தாதா அமெரிக்காவை நடுநடுங்க வைத்த குட்டி நாடு.!! அதிபயங்கர ஏவுகணைகளை செலுத்தி எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 10, 2019, 1:11 PM IST
Highlights

இந்நிலையில் அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது 

அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது . அமெரிக்கா தன் எதேச்சதிகார போக்கை  மாற்றிக் கொள்ளாதவரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை என அந்நாட்டு அதிபர்  கிம் ஜாங் அன்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .  உலகின்  நேரெதிர் துருவங்களாக விளங்கி வரும் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பும் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும்  கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினார் அப்போது வடகொரியாவை அணு ஆயுதம் அற்ற நாடாக மாற்றுவது  தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் அணுவாயுதப் பேச்சுவார்த்தை தொடங்கி பேசினர்.  ஆனால் அதில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை .

பின்னர் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்த ட்ரம்ப் மற்றும்  கிங் ஜான் அன்னும் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிலும் முடிவு எட்டப்படவில்லை.   இந்நிலையில்  வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் வடகொரிய எல்லையில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனர் .  இதனால் கோபமடைந்த வடகொரியா அமெரிக்க மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி மிரட்டியது.  இதனால்  அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே மீண்டும்  மோதல்  ஏற்படும்  சூழல் உருவானது .  அதேநேரத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும்   எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா கூறிவந்தது . 

இந்நிலையில் வட கொரிய அதிபர் அமெரிக்கா தன் எதேச்சதிகார  போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அணுஆயுத பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இருக்காது என அதிரடியாக தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது .  ஐநாவுக்கான வடகொரிய தூதர்  கிம் ஜோங் அன் இதுபற்றி கூறுகையில் நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை. 

வடகொரியா , அணு  ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை அட்டவணையில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது .  எனவே அமெரிக்காவுடன் எந்த  பேச்சுவார்த்தையும் இல்லை என தெரிவித்தார்.  இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படுவதாக அறிவித்த சிலமணி நேரத்தில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா மிக முக்கியமான அணு ஆயுதத்தை சோதித்து ஒட்டுமொத்த வல்லரசுகளையும் அதிர வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது . 

click me!