இம்ரான்கான் அரசாங்கம் மிகவும் கொடூரமானது..!! மனித உரிமைகள் கண்காணிப்பகம் பகிரங்க குற்றச்சாட்டு..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2020, 7:35 PM IST
Highlights

பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசாங்கம் மிகவும்  கொடூரமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தனக்கு எதிரானவர்களை அடக்குவதற்கு சில அமைப்புகளை இம்ரான் அரசு பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 

பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசாங்கம் மிகவும்  கொடூரமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அதாவது தனக்கு எதிரானவர்களை அடக்குவதற்கு சில அமைப்புகளை இம்ரான் அரசு பயன்படுத்துவதுடன் தனக்கு எதிரானவர்கள் மீது சில நிறுவனங்களை அவர்கள் ஏவுவதாக அது குற்றம்சாட்டியுள்ளது.  அதில் குறிப்பாக பாகிஸ்தானில் ஊழலை விசாரிக்கும் நிறுவனம், சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறது எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. சமீபத்தில் இம்ரான்கான் அரசாங்கம் தனக்கு எதிராக எழுதும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் தனக்கு எதிராக பேசும் செய்தியாளர்களை குறிவைத்து தாக்குவதாகவும், அவர்களை கடத்தி கொலை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதேபோல் அரசியலில் தனக்கு எதிராக  பேசும் அரசியல்வாதிகளையும் இம்ரான் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருவதாகவும், அவர்களின் குரல்வளையை  நெரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசாங்கம் மிகவும் கொடூரமானது என குற்றம் சாட்டியுள்ளது. தன்னை எதிர்க்கும் அவர்களின் குரல்வளையை நெரிப்பதுடன் சில நேர்மையற்ற நிறுவனங்களை பயன்படுத்தி தனக்கு எதிரானவர்களை ஊழல் வழக்குகளில் கைது செய்வதாகவும், அதற்கு தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தை என்.ஏ.பி-யை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதில் பல மூத்த தலைவர்கள் குறிவைத்து கைது  செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. 

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உட்பட பல தலைவர்கள் மீதுஎன்.ஏ.பி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் இம்ரான் கானின்,  என்.ஏ.பி அமைப்பு எதிர்க்கட்சித் தலைவர்களை சித்திரவதை செய்வதற்கும். அவர்களை அடக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது இந்நிலையில் இந்த விசாரணை அமைப்பின் அதிகாரத்தை குறைக்கவும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் 87 பக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதாவது பாகிஸ்தான் இளைஞர் எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக எந்தவிதமான புகார்களும் இல்லை, இருப்பினும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் என்.ஏ.பி மூலம் அதிகாரத்தை மேலும் பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன. 

அதன்மூலம் எந்த ஒரு நபரையும், எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி 90 நாட்கள் காவலில் வைக்க முடியும் இதற்காக இம்ரான் அரசு ஒரு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. பாகிஸ்தான் முன்னணி பத்திரிகையாளர்  மிர்-ஷகில்- உர் ரஹ்மான் அரசுக்கு விரோதமாக கட்டுரை எழுதியதாக மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் சிறையில் இருக்கிறார், அவரை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் நவாஸ் ஷெரிப்பும் பல மாதங்களாக சிறையில் இருந்தார், உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை யடுத்து அவருக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. முன்னாள் பிரதமர் கிலானி சாஜித் ககன் அப்பாசி ஆகியோரும் சிறைக்கு சென்றுள்ளனர். பஞ்சாப் மாநில பல்கலைக்கழகத் துணைவேந்தர், முஜஹித் கம்ரான், பேராசிரியர் ஜாவேத் அகமது ஆகியோர் 2018 ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. எனவே இனியும் இம்ரான் அரசாங்கம் ஒரு சர்வாதிகார அணுகுமுறையை கைவிடாவிட்டால், ஒரு மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எதிர் கட்சிகள் எச்சரித்துள்ளன. 
 

click me!