வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்த நோயாளிகளில் 90 சதவீதம் நபர்களுக்கு தற்போதும் நுரையீரல் சேதமடைந்துள்ளதாக சீன மருத்துவக்குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்த நோயாளிகளில் 90 சதவீதம் நபர்களுக்கு தற்போதும் நுரையீரல் சேதமடைந்துள்ளதாக சீன மருத்துவக்குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தக் குழு வுஹான் பல்கலைக்கழகத்தில், ஜாங்னான் மருத்துவமனையில் பெங் ஜியாங் தலைமையில் செயல்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் 100 குணமடைந்த நோயாளிகளை இக்குழு கவனித்து வருகின்றது. கொரோனா வைரஸ் இருந்து குணமடைந்தவர்களால் தற்போது ஆறு நிமிடத்திற்கு 400மீட்டர் தொலைவே நடக்க முடிகின்றது பொதுவாக இவர்களது வயதில் கொரோனா வைரஸ் பதிப்படையாதவர்களால் 500 மீட்டர் நடக்க முடிகின்றதாக, பெங் குழுவினர் கண்டறிந்த சோதனை கூறுகின்றது.
இது நோயாளிகளின் நடைப் பயிற்சி சோதனையில் கண்டறியப் பட்டது. ஆய்வில் நோயாளிகளின் சராசரி வயது 59. மற்றொரு ஆய்வு குழுவினர் செய்த சோதனையில், குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் ஆக்சிஜன் இயந்திரங்கள் தேவைப்படுகின்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சோதனையானது பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில், டோங்கிஜிமென் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் லியாங் டெங்சியாவோ 65 வயது மேற்பட்ட நோயாளிகளைக் கொண்டு சோதனை நடத்தினார். அந்த ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மேல் செலுத்தப்பட்ட ஆன்டிபாடி 100 நபர்களில் மேல் இருந்து 10 சதவீதம் மறைந்திருப்பதாக, சீன செய்தியிதழ்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பும் முழுமையாகக் குணமடையவில்லை, அவர்கள் மனச்சோர்வு முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதன்முதலாகச் சீனாவில் வுஹான் நகரத்தில் பரவ தொடங்கி பின்னர் உலகெங்கும் பரவத்தொடங்கியது. ஹூபே மாகாணத்தில் இதுவரை 68,138பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று பதிவாகியுள்ளது. அதில் 4,512 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது சீனாவில் வியாழக்கிழமை நிலவரப் படி 37 பேர் புதியதாகப் பாதிப்படைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. புதியதாக பாதிப்படைந்தவர்களின் பத்துபேர் வெளிநாட்டுப் பயணிகள் என்று தேசிய சுகாதார அமைப்பு வெய்போ சமூக ஊடகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் புதியதாக 14 பேர் அறிகுறியுடன் உள்ளதாகவும் இது ஒரு நாளைக்கு முன்னர் 20 ஆகவும் இருந்தது.