
சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறும் ஒரு ஆவணம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் மிலிட்டரி மருத்துவமனையில் (PEMH) இம்ரான் கானுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாக இந்த ஆவணம் கூறுகிறது.
மருத்துவப் பரிசோதனை:
இருப்பினும், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மருத்துவர்கள் குழுதான் இம்ரான் கானுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அறிக்கை சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த ஆவணம் உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ பதிலும் இதுவரை வரவில்லை.
உடல் ரீதியான தாக்குதல்:
ஆவணத்தில் உள்ள நோயாளியின் பெயர் இம்ரான் அகமது கான் நியாசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசோதனையில், சமீபத்தில் உடல் ரீதியான தாக்குதலுக்கான ஆதாரம் (எச்சிமோஸ்கள், சிராய்ப்புகள்) இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பிறப்புறுப்பு பரிசோதனையில் வெளிப்புற பெரினியல் எச்சிமோசிஸ் மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஜனவரியில், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பொறுப்புத்துறப்பு: இந்த வைரலாகப் பரவிவரும் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை ஏசியானெட் நியூஸ் உறுதிப்படுத்த முடியாது.