அது நடந்து விடுமோ..? இஸ்லாமிய நாடுகளை ஒன்று திரட்டும் பாகிஸ்தான் பிரதமர்... படபடப்பில் உலக நாடுகள்..!

By Thiraviaraj RM  |  First Published Dec 16, 2021, 5:57 PM IST

இம்ரான் கானின் இந்த வாக்குறுதிகள் மனிதாபிமான அடிப்படையில் இல்லை. அதில் உள்நோக்கம் உள்ளது.


வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள தலிபான்களுடன் சர்வதேச சமூகம் தொடர்பு கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக் கொண்டார்.

Tap to resize

Latest Videos

 கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கானி தலைமையிலான ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தலிபான்கள் ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. அப்போது முதல் ஆப்கானிஸ்தான் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்க,  பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் பாய்ந்து பாய்ந்து ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கானிஸ்தானின் முயற்சிகளை ஆதரிக்கும் விதமாக பாகிஸ்தானில் இருந்து பணியாற்ற விரும்பும் மனிதாபிமான அமைப்புகளுக்கு உதவ வேண்டும் என்றும், காபூலுக்கு வான் மற்றும் தரைப்படை மூலமாக இஸ்லாமாபாத் உதவும் என ஏற்கனவே உறுதியளித்துள்ளார். 


இருப்பினும், இம்ரான் கானின் இந்த வாக்குறுதி குறித்து ஆப்கானிஸ்தான் மீதான மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையில், "இம்ரான் கானின் இந்த வாக்குறுதிகள் மனிதாபிமான அடிப்படையில் இல்லை. அதில் உள்நோக்கம் உள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக மனிதாபிமானம் என்கிற நாடகம் நடத்தப்படுகிறது என கவலை தெரிவித்துள்ளது. 


 டிசம்பர் 19 அன்று, இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் பாகிஸ்தானின், ஆப்கானிஸ்தான் உதவி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அப்போது ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானை போல ஆதரிக்குமா? அல்லது நிராகரிக்குமா என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் மற்ற நாடுகள் கலக்கமடைந்துள்ளன.

click me!