Tsunami Alert: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. இந்தியாவுக்கு பாதிப்பா?

Published : Dec 14, 2021, 01:12 PM IST
Tsunami Alert: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. இந்தியாவுக்கு பாதிப்பா?

சுருக்கம்

இந்தோனேஷியாவின் மவுமேரா நகரின் வடக்கு பகுதியிலிருந்து 100 கி.மீ தொலை இருக்கும் திமோர் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ப்ளோரஸ் தீவில், கடற்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் இன்று இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு (உள்ளூர்நேரப்படி காலை 11.20 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தோனேஷியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவிகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. இதனால், அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கமா என இந்திய சுனாமி ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.

இந்தோனேஷியாவில் அடிக்கடி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவது வழக்குமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தோனேஷியாவின் மவுமேரா நகரின் வடக்கு பகுதியிலிருந்து 100 கி.மீ தொலை இருக்கும் திமோர் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ப்ளோரஸ் தீவில், கடற்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் இன்று இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு (உள்ளூர்நேரப்படி காலை 11.20 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நாட்டின் பல இடங்களில் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு இருப்பிடத்தை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக அப்பகுதியில் ஆபத்தான சுனாமி அலைகள் எழக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை மையமாக வைத்து 1000 கி.மீ பரப்பளவுக்கு மோசமான சுனாமி அலைகள் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் சுனாமி அலை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்த நிலையில் இந்தியாவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என இந்திய சுனாமி மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு இந்திய கடற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!