'மேக்-அப்’ போடாத மனைவியை பார்த்து அதிர்ச்சி : விவாகரத்து செய்த கணவன்

Asianet News Tamil  
Published : Oct 20, 2016, 06:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
'மேக்-அப்’ போடாத மனைவியை பார்த்து அதிர்ச்சி : விவாகரத்து செய்த கணவன்

சுருக்கம்

துபாயைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியை முதல்முறையாக ‘மேக் அப்’ இல்லாமல் பார்த்தவுடன், அடையாளம் காணமுடியாமல் தவித்தார். பின் தனது மனைவிதான் என தெரிந்தவுடன்  அதிர்ச்சியடைந்து அவரை விவாகரத்து செய்துள்ளார்.  

ஷார்ஜாவில் வசித்துவரும் அரேபிய தம்பதிக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்துள்ளது. 34 வயதுடைய கணவரும், 24 வயதுடைய மனைவியும், அங்குள்ள அல் மம்ஜார் கடற்கரைக்கு குளிக்கச் சென்றனர். அங்கு தான் அந்த பெண்ணின் வாழ்க்கையில் விதி விளையாடியது.

அப்போது கடற்கரையில் கணவனும், மனைவியும் குளித்து விளையாடிக்கொண்டு கரைக்கு திரும்பும்போது, மனைவியைக் காணாமல் கணவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், மனைவி அருகில்தான் நடந்து வந்து கொண்டிருந்தார். தனது மனைவி அருகில் தான் இருந்தபோதிலும், அவரை அடையாளம் காணமுடியாமல், கணவர் திகைத்துள்ளார்.

 மனைவி முகத்தில் இருந்த ‘மேக் அப்’ அனைத்தும் களைந்து, உண்மையான இயற்கையான முகம் வெளிப்பட்டது இதைக் கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு முன் ‘மேக்அப்’ போட்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். மேக் அப்பை கலைத்துவிட்டு பார்த்தால், என்னால் என் மனைவியையே அடையாளம் காணமுடியவில்லை எனக் கூறி அந்த பெண்ணை அவர் விவாகரத்து செய்தார்.

இதையடுத்து, கணவர் விவாகரத்து செய்தபின், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் அளித்த உளவியல் டாக்டர் அப்துல் அஜிஸ் ஆசிப் கூறுகையில், “ விவாகரத்தால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தனக்கு கவுன்சிலிங் தேவை என அந்த பெண் கூறியதால் அவருக்கு கவுன்சிலிங் அளித்தேன்.

இந்த பெண் திருமணத்துக்கு முன், முகமாற்று சிகிச்சை, செயற்கை புருவம் என வைத்து தன்னை வருங்காலக் கணவன் முன் அழகாகக் காட்டியுள்ளார். இதைப்பார்த்த மணமகன் அந்த பெண்ணின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், முதல்முறையாக ‘மேக் அப்’ இல்லாமல் பார்த்த கணவர், மனைவியை அடையாளம் காணமுடியாமல் அதிர்ச்சியடைந்தார். இதற்காகவா நான் ஆசைப்பட்டேன் என நொந்துகொண்டார். கணவரிடம் அந்த பெண் உண்மையைக் கூறியும் அவர் ஏற்க மறுத்து அவர் விவாகரத்து செய்துள்ளார்'' எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை..! பாகிஸ்தானில் அமெரிக்கா -விரிக்கும் வலை..!
Energy Lockdown: ஈரான் போரால் உலகத்துக்கு புது சிக்கல்? 'எனர்ஜி லாக்டவுன்'னா என்ன தெரியுமா?