மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது? எந்த அளவு பூகம்பம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? என்பது குறித்து பார்க்கலாம்.
How does an earthquake occur: மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மரை மையமாக கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாக பதிவானது. இதனால் மியான்மர் மட்டுமின்றி தாய்லாந்தின் பாங்காங்கிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ரயில் சேவை, விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இதுவரை 55 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது?
நிலநடுக்கம் (Earthquake) ஒரு இயற்கை பேரழிவு ஆகும். இது பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள தட்டுகளின் (Tectonic Plates) இயக்கத்தால் ஏற்படுகிறது. இந்த தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது அல்லது நகரும் போது, அதிகப்படியான ஆற்றல் வெளியேற்றப்படுகிறது, இதன் காரணமாக பூமியின் உள்ளே அதிக அதிர்வு ஏற்படுகிறது. பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
பாங்காக், மியான்மர் நிலநடுக்கம்; 55 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
நிலநடுக்கத்தின் தீவிரம் மற்றும் அதன் தாக்கம்
நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் (Richter Scale) அளவிடப்படுகிறது. இந்த அளவுகோல் பூகம்பத்தின் சக்தியை 0 முதல் 10 வரை அளவிடுகிறது. 10 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பூமியில் வருவது சாத்தியமற்றது என்று கருதப்படுகிறது.
ரிக்டர் அளவுகோளில் 0 முதல் 1.9 வரை: நில அதிர்வு வரைவி (Seismograph) மூலம் மட்டுமே உணர முடியும்.
ரிக்டர் அளவுகோளில் 2 முதல் 2.9 வரை: மிகவும் லேசான அதிர்வு, பொதுவாக மக்கள் உணர மாட்டார்கள்.
3 முதல் 3.9: லேசான அதிர்வு, இது ஒரு லாரி செல்வது போன்ற அதிர்வை உருவாக்குகிறது.
4 முதல் 4.9: ஜன்னல்கள் அசையலாம், பொருட்கள் விழலாம்.
5 முதல் 5.9: தளபாடங்கள் அசையலாம், சிறிய கட்டமைப்பு சேதம் ஏற்படலாம்.
6 முதல் 6.9: கட்டடங்களின் அடித்தளத்தில் விரிசல் ஏற்படலாம், சுவர்கள் விழலாம்.
7 முதல் 7.9: பெரிய கட்டடங்கள் விழலாம், குழாய்கள் வெடிக்கலாம்.
8 முதல் 8.9: பாலங்கள், உயரமான கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடையலாம்.
9 மற்றும் அதற்கு மேல்: பேரழிவு மிகவும் அதிகமாக இருக்கும். மிகக் கடுமையான் சேதம் ஏற்படும். சுனாமி (Tsunami) ஏற்பட வாய்ப்பு அதிகம்.
நிலநடுக்கத்தை கணிக்க முடியுமா? (Do Earthquake Prediction possible?)
தற்போது, நிலநடுக்கம் எப்போது, எங்கு வரும் என்பதை துல்லியமாக கணிக்க எந்த அறிவியல் முறையும் இல்லை. இருப்பினும், யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (USGS) போன்ற நிறுவனங்கள் வரலாற்று தரவு மற்றும் புவியியல் நிலைமைகளின் அடிப்படையில் சாத்தியமான நிலநடுக்க பகுதிகளை கணிக்க முடியும்.
நிலநடுக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
வலுவான மற்றும் நிலநடுக்கத்தை தாங்கும் கட்டடங்களை கட்டவும்.
பூகம்பம் வரும்போது திறந்த வெளியில் செல்லவும்.
உயரமான கட்டடங்களிலிருந்து விலகி இருங்கள்.
வீட்டில் உள்ள கனமான பொருட்களை நன்றாக கட்டி வைக்கவும்.
அவசர கால கருவிகளை (Emergency Kit) எப்போதும் தயாராக வைத்திருங்கள்.
நிலநடுக்கம் ஒரு இயற்கை பேரழிவு தான். ஆனால் விழிப்புணர்வு மற்றும் சரியான தயாரிப்பு மூலம் அதன் பாதிப்பை குறைக்க முடியும்.
மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், பாங்காக் வரை பாதிப்பு