பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்பட்டது தொடர்பாகவும், உயிரை காப்பாற்ற எடுத்த நடவடிக்கை தொடர்பாக விபத்தை நேரில் பார்த்தவர் அதிர்ச்சியோடு கூறியுள்ளார்.
விபத்து நடைபெற்றது எப்படி?
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தனது 46வது வயதில் கார் விபத்தில் சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 198 ஒருதின போட்டிகளிலும், 26 டெஸ் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கிரிக்கெட் உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆஸ்திலேலியாவில் உள்ள தனது வீடு இருக்கும் பகுதியான டவுன்ஸ்வில்லில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்சில் ஒரு வாகன விபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவரச உதவி செய்தும் பலனளிக்கவில்லை
இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் வாசி கூறுகையில், விபத்து நடைபெற்றதும் அந்த இடத்திற்கு தான் விரைந்து சென்றதாகவும், விபத்து ஏற்பட்ட காரில் ஒருவர் மட்டுமே இருந்தார். அந்த நபர் காரில் உட்பகுதியில் சிக்கி கொண்டார். இதனையடுத்து அவரை வெளியே இழுக்க முயற்சத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், மூச்சு இல்லாமல் இருந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்க்கு CPR செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது நாடித்துடிப்பை சரிபார்த்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் உடலில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லையென கூறினார். இதனைதொடர்ந்து அவருக்கு அவசர உதவிகள் செய்யப்பட்டதாகவும் ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்து ஏற்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய முற்பட்டனர்.ஆனால் நகரப்பகுதியில் இருந்து வெளியே விபத்து நடைபெற்றதால் அந்த இடத்தில் சிசிடிவி பொறுத்தப்படாமல் இருந்துள்ளது. இந்தநிலையில் விபத்து எப்படி நடைபெற்றது என்பது தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.