சிங்கப்பூரர்கள் பெரிதும் விரும்பாத சில செய்திகள் வெளியாகவிருப்பதாகவும், சிங்கப்பூர் விரைவில் Haze எனப்படும் மூடுபனி போன்ற வானிலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அந்நாட்டு தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமத்ரா தீவு
சிங்கப்பூருக்கு, கடல் வழியாக சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுதான் சுமத்ரா, இந்த இந்தோனேசியாவின் சுமத்ராவில் தீவில், கடந்த சில நாட்களாக ஹாட்ஸ்பாடின் செயல்பாடுகளில் அதிகரிப்பு காணப்படுவதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
ஹாட்ஸ்பாட் என்றால் என்ன?
ஒரு ஹாட்ஸ்பாட் என்பது பூமியின் ஆழத்திலிருந்து, மேலே உயரும் சூடான கனிம பொருட்களின் தொகுப்பு. ஏறத்தாழ ஒரு மிகச்சிறிய எரிமலை வெடிப்பை போன்றது தான் இது என்று கூறலாம். இவை தொடர்ச்சியாக வாயுக்களை வெளியேற்றிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது NEA அறிவிப்பின்படி இந்த ஹாட்ஸ்பாட்டின் எண்ணிக்கை சுமத்ராவில் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
கடந்த செப்டம்பர் 2ம் தேதி மட்டும் 28 ஹாட்ஸ்பாட்களும், நேற்று செப்டம்பர் 3ம் தேதி, 23 ஹாட்ஸ்பாட்களும், தெற்கு சுமத்ராவில் கண்டறியப்பட்டன என்றும் NEA தெரிவித்துள்ளது. NEA haze வலைத்தளத்தின்படி, மேற்கு போர்னியோ, மத்திய மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பல புவியியல் நிலையங்கள் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தைப் பற்றி தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த ஹாட்ஸ்பாட்களில் வெளியேறும் புகை மூட்டங்கள் "சிங்கப்பூரிலிருந்து இன்னும் சிறிது தொலைவில் உள்ளன" என்று NEA தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது. மேலும் அந்த புகைமூட்டம் தென்கிழக்கில் இருந்து வீசும் காற்றின் திசையால் நேரடியாக சிங்கப்பூரை அந்த புகை மூட்டங்கள் தாக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் தெற்கு மற்றும் மத்திய சுமத்ராவில் தற்போதைய வறண்ட வானிலை வரும் வாரத்தில் தொடரும் என்பதால், அது அங்குள்ள ஹாட்ஸ்பாட் மற்றும் புகை மூட்ட நிலைமையை அதிகரிக்கலாம் என்றும், மேலும் சிங்கப்பூரை அது பாதிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் NEA தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மக்கள் சற்று கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும், மேலும் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்றின் தரத்தை பொதுமக்கள் NEA இணையதளத்தில் சென்று சோதித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.