இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுவதாகக் கூறி பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் பல்கலைக்கழகங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதித்துள்ளது.
இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்து பண்டிகையான ஹோலியை கொண்டாட பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடும் வீடியோ வைரலானதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அறிவித்த பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம், இஸ்லாத்தின் கலாச்சாரம் மற்றும் தார்மீக விழுமியங்களை நிலைநிறுத்தும் வகையில் இளைஞர்களை மாற்றுவதில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் சமூக-கலாச்சார விழுமியங்களிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட, இஸ்லாமிய அடையாளத்தைப் பாதிக்கும் ஹோலி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதைப் பார்ப்பது வருத்தமானது என்றும் கூறி இருக்கிறது. "இந்துப் பண்டிகையான ஹோலியைக் கொண்டாடுவதில் காணப்படும் உற்சாகம் கவலையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு… இது நாட்டின் நற்பெயருக்கு பாதகமானது" என்றும் அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
Holi celebrations in Quaid-I-Azam University Islamabad Pakistan 🍁
Biggest holi celebration in Pakistan 💓 pic.twitter.com/xdBXwYEglt
பாகிஸ்தானின் கலாச்சாரம், மதிப்பீடுகள் மற்றும் மரபுகளில் வேரூன்றிய கொள்கைகளை உள்ளடக்கிய தேசத்தின் சித்தாந்தத்தை பாதுகாப்பதும், இஸ்லாமிய தேசத்தின் உயர்கல்வித் துறையை மேம்படுத்துவதும் ஆணையத்தின் பொறுப்பு என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சகிப்புத்தன்மையுள்ள சமுதாயத்தை வளர்ப்பதில் மதப் பன்முகத்தன்மையின் பங்கையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் அது அதிகமாகிவிடாமல் இருக்கவேண்டும் என்பதில் மாணவர்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு! விஜய் ரசிகர்களை தெறிக்கவிடும் திருமாவளவன்!
Say no to Mullahism and theocratic state structure,based on the use of sacred relegion for political gains,war economy and legitimacy of dictatorial rulers.
Welcome to secularism in Pakistan🇵🇰. pic.twitter.com/eMBAbm1rhy
இந்த அறிவிப்பின் விளைவாக, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் நாட்டின் அடையாளம் மற்றும் சமூக விழுமியங்களுடன் பொருந்தாத நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.
இந்த அறிவிப்பு, சிறுபான்மையினரிடம் பாகிஸ்தான் பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. இந்த வாதத்தை இந்தியா பல முறை முன்வைத்துள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சர்வதேச மத சுதந்திரம்’ குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கை, மத சுதந்திரத்திற்கான அக்கறை தேவைப்படும் 12 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானையும் குறிப்பிட்டிருக்கிறது.
மும்பை ஐஐடிக்கு ரூ.315 கோடி நன்கொடை கொடுத்த 'இன்போசிஸ்' நந்தன் நிலேகனி!