ஒரிஜினலைப் போலவே இந்தியாவுக்குள் கள்ளநோட்டுக்களை உலவவிடும் பாகிஸ்தான்... என்.ஐ.ஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

By Thiraviaraj RM  |  First Published Oct 15, 2019, 11:49 AM IST

இந்தியாவிற்குள் பாகிஸ்தான் கள்ளநோட்டுக்களை உலவவிடுதாக கூறப்பட்டு வந்த நிலையில் தேசிய புலனாய்வுதுறை வெளியிட்டுள்ள அறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 


டெல்லி மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களின் தலைவர்களின் தேசிய மாநாடு அங்கு நடைபெற்றது.  அந்த மாநாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பின் ஐஜி அலோக் மிட்டல் ஒரு  விளக்கக் காட்சியை வீடியோவாக காட்டினார். அதில் உயர்தர கள்ள ரூபாய்  நோட்டுகளை பாகிஸ்தான் அச்சிட்டு வருகிறது என  கூறினார். 

கூட்டத்தில் அவர் மேற்கோள் காட்டிய ஆறு முக்கிய சவால்களில் உயர்தர கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதும் ஒன்று. தேசிய புலனாய்வு அமைப்பு என்பது கள்ள ரூபாய் நோட்டுகள்  தொடர்பான வழக்குகளுக்கான  ஏஜென்சி. இதுவரையில் இதுபோன்ற 48 வழக்குகளை விசாரித்துள்ளது. அவற்றில் 13 வழக்குகள் தண்டனைக்குரியவை.

Latest Videos

மேற்கு எல்லை மற்றும் நேபாளம் வழியாக உயர்தர கள்ள நோட்டுகள் கொண்டுவரப்படுவதாகவும், குறைந்த தரம் வாய்ந்த கள்ள நோட்டுகளை  வங்காள தேசத்தில் இருந்து வருவதாகவும் அலோக் மிட்டல் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 50 கோடிக்கு மேற்பட்ட கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஜூன் மாதம் மக்களவையில் அறிவித்தது.

click me!