ஹெச்பிஓ, கேபிள்விஷன் நிறுவனங்களின் நிறுவனர் சார்லஸ் டோலன் 98 வயதில் காலமானார். கேபிள்விஷன் நாட்டின் முதல் 24 மணிநேர உள்ளூர் செய்தி சேனலை லாங் ஐலேண்டில் 1986 இல் தொடங்கியது. 2021ஆம் ஆண்டின் இறுதியில் டோலன் 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்தார்.
ஹெச்பிஓ, கேபிள்விஷன் நிறுவனங்களின் நிறுவனர் சார்லஸ் டோலன் 98 வயதில் காலமானார். மன்ஹாட்டனில் முதல் கேபிள்-டிவி உரிமையை வென்ற சார்லஸ் டோலன், ஹோம் பாக்ஸ் ஆபிஸ் இன்க் நிறுவனத்தை நிறுவினார். பின்னர் அதை கேபிள்விஷன் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷனாக மாற்றினார். அது அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய கேபிள் டிவி நிறுவனமாக வளர்ந்தது.
முதுமை காரணமாக ஓய்வில் இருந்த டோலன் சனிக்கிழமை இறந்தார் என அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். டோலன் ஊடகத் துறையில் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவராகக் கருதப்பட்டார்.
கேபிள்விஷன் நாட்டின் முதல் 24 மணிநேர உள்ளூர் செய்தி சேனலை லாங் ஐலேண்டில் 1986 இல் தொடங்கியது. கேபிள்விஷன் 2015ஆம் ஆண்டின் மத்தியில் நியூயார்க் நகரப் பகுதியில் சுமார் 26 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட Altice NV நிறுவனம் 17.7 பில்லியன் டாலருக்கு கேபிள்விஷனை வாங்கி, அமெரிக்காவில் நான்காவது பெரிய கேபிள் சேவை நிறுவனமாக உருவானது.
SIP முதலீட்டில் ரூ.10,000 க்கு 19 லட்சம் கிடைக்கும்! டாப் மியூச்சுவல் ஃபண்டுகள்!
ஆனால், கேபிள்விஷனின் ஒரு பிரிவாகத் தொடங்கப்பட்ட AMC நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக 2020 வரை பணியாற்றினார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின்படி, 2021ஆம் ஆண்டின் இறுதியில் டோலன் 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்தார்.
சார்லஸ் பிரான்சிஸ் டோலன் அக்டோபர் 16, 1926 இல் கிளீவ்லேண்டில் பிறந்தார். 18 வயதில், அவர் அமெரிக்க இராணுவ விமானப்படையில் சேர்ந்தார். 10 மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் உலகப் போரின் முடிவோடு அவரது ராணுவப் பணியும் முடிவுக்கு வந்தது.
பிறகு கிளீவ்லேண்டிற்குத் திரும்பிய அவர், ஜான் கரோல் பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு அவர் தனது வருங்கால மனைவி ஹெலன் பர்கெஸை சந்தித்தார். கல்லூரிப் படிப்பை முடிக்காத அவர்,15 நிமிட விளையாட்டு ரீல்களை தொலைக்காட்சி நிலையங்களுக்கு விற்று வியாபாரம் செய்தார்.
இஸ்ரோவின் ஸ்பெடெக்ஸ் திட்டம்! PSLV C-60 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!