ஹவாய் அதிகாரிகள் காட்டுத் தீயின் ஆபத்தை குறைத்து மதிப்பிட்டு துரித நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்றும் எந்த எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை என்றும் என்றும் அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மாவி தீவில் மூண்ட பயங்கர காட்டுத் தீ நகரங்களுக்கும் பரவியதில் பலியானவா்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலர் தீயில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் மாவி தீவில் புதன்கிழமை திடீரென காட்டுத் தீ பற்றியது. காற்றின் வேகத்தில் மிக விரைவாக பரவிய காட்டுத் தீர நகர்ப்பகுதிகளிலும் படர்ந்தது. குறிப்பாக மாவி தீவில் உள்ள ஹலேனா, புலேஹு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பகுதி தீக்கிரையாகியுள்ளது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் நகரம் காட்டுத் தீயால் மோசமாகப் பாதிப்பு அடைந்துள்ளது. இந்தக் காட்டுத் தீயில் சுமார் 19 ஆயிரம் வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தமிழருக்கு 12 கசையடி... 18 ஆண்டு சிறை... சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு
லஹேனா நகரில் 150 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து கொண்டுசென்று நடப்பட்ட பிரம்மாண்டமான ஆலமரமும் நெருப்பில் கருகிவிட்டது. காற்றில் குறைவான ஈரப்பதம், அதிவேகமாக வீசிய காற்று ஆகியவற்றால் காட்டுத் தீ மளமளவென பரவிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த காட்டுத் தீயில் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று அந்நாட்டு பெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி கூறுகிறது. இதனிடையே, அதிகாரிகள் காட்டுத் தீயின் ஆபத்தை குறைத்து மதிப்பிட்டு துரித நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்றும் எந்த எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை என்றும் என்றும் அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.