பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையிட்டனர்.
கடந்த ஆண்டு சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த பிரான்சின் அடையாள சின்னமான மத்திய பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்குள்ள மூன்று தளங்களில் இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை இன்று சனிக்கிழமை அன்று போலீசார் உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.
அண்ட் ஈபிள் கோபுர பணிகளை நிர்வகித்து வரும் அமைப்பான SETE, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதியில் முழுவதிலும், மேலும் கோபுரத்தின் மாடியில் அமைந்துள்ள உணவகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் அவர் சோதனையிட்டனர்.
undefined
மிரட்டல் வந்த சிறுது நேரத்தில் அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர், மதியம் 1.30 மணியளவில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகவும், உலக அதிசயங்களின் ஒன்றாக திகழும் ஒரு இடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈபிள் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் சுமார் 136 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 1887ல் தொடங்கி, மார்ச் 31, 1889ல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கோபுரம் திறக்கப்பட்ட 1889ம் ஆண்டு உலக அளவில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் அந்த இடத்தை சுற்றிப்பார்க்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் மைனர் சிறுமிக்கு முன்பாக சுயஇன்பம்..? 33 வயது இந்திய அமெரிக்க டாக்டர் கைது - FBI அதிரடி!