hafiz Saeed :மும்பை குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்டு, தேடப்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத மட்டுமல்ல, அவரின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்தையும் தீவிரவாதியாக மத்திய அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது.
மும்பை குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்டு, தேடப்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத மட்டுமல்ல, அவரின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்தையும் தீவிரவாதியாக மத்திய அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது.
தல்ஹா சயீத் சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின்(யுஏபிஏ) சட்டத்தின் கீழ் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
undefined
மும்பை குண்டு வெடிப்பு
2008ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக, தீவிரவாதியாக ஹபீஸ் சயீத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரின் மகன், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த தலைவராக இருக்கும் தல்ஹா சயீத், தற்போது பாகிஸ்தானின் லாகூர் நகரில் வசித்து வருகிறார். இந்தியாவில் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலிலும் தல்ஹா சயீத்துக்கு தொடர்பு இருக்கிறது.
உள்துறை அமைச்சகம்
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு ஓர் அறிவிப்பு வெளியிட்டது அதில் கூறப்பட்டதாவது : “ இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தவும், நிதி திரட்டவும், ஆட்களைச் சேர்க்கவும் தல்ஹா சயீத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உல்ள பல்வேறு லஷ்கர் இ தொய்பா மையங்களுக்குச் சென்று வரும் தல்ஹா, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தும், மேற்கத்திய நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் நலனுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தீவிரவாத செயலுக்கு உதவி
ஆதலால், ஹபீஸ் தல்ஹா சயீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆதலால், சட்டவிரோதத் தடைச்சட்டத்தின் கீழ் தல்ஹா சயீத்தை தீவிரவாதியாக மத்திய அரசு அறிவிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
32 பேர் தீவிரவாதிகள்
இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டதில் 32-வது நபர் தல்ஹா சயீத். இவரின் தந்தை ஹபீஸ் சயீத், ஜெய்ஷ் இ முகமது தலைவர் மவுலானா மசூத் அசார், தாவுத் இப்ராஹிம், ஜாகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட பலர் தீவிரவாதப்ப ட்டியலில் உள்ளனர்.
ஹபீஸ் சயீத் தீவிரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் நேற்று பாகிஸ்தான் நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்குப்பின் நேற்று இரவு மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.