பாலியல் தொல்லை.. ரஷிய வீரர்களிடம் இருந்து தப்பிக்க ‘முடியை’ வெட்டும் பெண்கள்.. அதிர்ச்சி சம்பவம் !

By Raghupati R  |  First Published Apr 9, 2022, 11:03 AM IST

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா உக்ரைனின் பதில் தாக்குதலால் திணறி வருகிறது. ரஷியா படைகள் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் மீட்டு வருகிறது.


ரஷியா - உக்ரைன் போர் :

ரஷியா - உக்ரைன் போரால் உக்ரைன் நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டன. ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இதில் ரஷியா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களும் உயிர் இழந்து உள்ளனர். இந்த போரின் போது ரஷிய வீரர்கள் பலரை கொன்று குவித்ததாக உக்ரைன் தெரிவித்தது. ஆனால் அதனை ரஷியா மறுத்தது.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் முதன்முறையாக உக்ரைனுடனான போரில் நிறைய வீரர்களை இழந்து விட்டோம் என ரஷியா ஒப்புதல் அளித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் கிரெம்ளின் கூறும்போது, உக்ரைன் போரில் ரஷியா படைவீரர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது எங்களுக்கு பெரிய கவலையை அளிக்கிறது எனவும் தெரிவித்து உள்ளார்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை : 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு,  ட்விட்டரில் வந்த ஒரு வீடியோவில்  , ரஷ்ய வீரர் ஒருவர் தனது பையிலிருந்து   ஒரு சில ஆணுறைகளை வெளியே எடுக்கும் காட்சி இருந்தது.அதை பார்த்த பல நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் .பல பொதுமக்களும் வேதனைப்பட்டனர்.

இது பற்றி உக்ரைன் நாட்டு எம்.பி. மரியா மெசென்ட்சேவா கூறுகையில் ,ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ள  பகுதிகளில் ரஷ்ய வீரர்களால் பல பெண்கள்  கணவரின் பிணங்களுக்கு நடுவே ,பல மணிநேரம் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள ப்ரோவரி ரேயோனில் உள்ள ஒரு கிராமத்தில், ரஷ்ய வீரர் ஒருவர் பெண்ணின் கணவனை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரை தனது குழந்தையின் முன்னிலையில் பலமுறை சீரழித்த சம்பவம் நடந்ததாக வேதனையுடன் கூறியுள்ளார். 

மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு உக்ரைன் நாட்டு மக்கள்  அமைதியாக இருக்க மாட்டார்கள்  என்றும் எச்சரித்தார். அதே போல தலைநகர் கீவின் துணை மேயர் மேரினா பெஷாஸ்ட்னா ரஷிய வீரர்களின் அட்டூழியத்தை தெரிவித்து இருக்கிறார். உக்ரைன் தலைநகர் கீவ் ஆக்கிரமிப்பு காலத்தில் இருந்தபோது பெண்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

ரஷிய வீரர்கள் 10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து பெண்களின் உடல்களில் முத்திரை குத்தியுள்ளனர். மேலும் பெண்கள் ரஷிய வீரர்களால் கற்பழிக்கப்படாமல் இருக்க, தங்கள் தலைமுடியை குட்டையாக வெட்டியுள்ளனர். அதனால் அவர்களை ரஷிய வீரர்கள் கற்பழிக்காமல் இருப்பார்கள் என்று பெண்கள் கருதி இதை செய்து வருகின்றனர்’ என்று கூறினார். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : Tamilnadu Rains : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் வெளியிட்ட சூப்பர் தகவல் !

click me!