haj 2022: புனித ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, ஹஜ் புனித யாத்திரை வருவோர் எண்ணிக்கையை 10 லட்சமாக இந்த ஆண்டு உயர்த்த சவுதி அரேபியா அரசு முடிவுசெய்துள்ளது.
புனித ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, ஹஜ் புனித யாத்திரை வருவோர் எண்ணிக்கையை 10 லட்சமாக இந்த ஆண்டு உயர்த்த சவுதி அரேபியா அரசு முடிவுசெய்துள்ளது.
கொரோனா பரவல்
கொரோனா பரவல் குறைந்துவிட்டநிலையில் யாத்திரை வருவோர் எண்ணிக்கையை 2 ஆண்டுகளுக்குப்பின் அதிகரிக்க முடிவுசெய்துள்ளது. அதாவது சவுதி அரேபியா தவிர்த்து பிறநாடுகளில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக யாரும் ஹஜ் யாத்திரை வருவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
புனித மெக்கா நகருக்குவரும் 65வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று சவுதி அரேபியா அரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நெகட்டிவ் சான்று
வெளிநாடுகளில் இருந்து ஹஜ் புனித யாத்திரை வருவோர் 72 மணிநேரத்துக்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழும், தடுப்பூசி செலுத்தியிருப்பதும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டிலிருந்து எந்தப் பயணிகளையும் ஹஜ் புனிதப் பயணத்துக்கு சவுதி அரேபியஅரசு அனுமதிக்கவில்லை. கடந்த ஆண்டு உளநாட்டைச் சேர்ந்த 60ஆயிரம்பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அரசு அறிவிப்பு
சவுதி அரேபியா அரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் “ இரு புனித மசூதிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும், புனிதப் பயணம் வரும் யாத்ரீகர்களை பாதுகாப்பதும் அரசின் கடமை. அதேநேரம் இறைத்தூதர் இடத்துக்குவரும் யாத்ரீகர்களை அதிகளவில் அனுமதிப்பதும், உலகளவில் மக்களுக்கு அனுமதியளிப்பதும் எங்களின் கடமை. அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை, ஆன்மீகரீதியான சூழலை உருவாக்கிக் கொடுப்பது அரசின் கடமை.
ஆதலால், புனித மெக்கா நகருக்குவரும் 65வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் வெளிநாடுகளில் இருந்து ஹஜ் புனித யாத்திரை வருவோர் 72 மணிநேரத்துக்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழும், தடுப்பூசி செலுத்தியிருப்பதும் அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது