மும்பையில் 188 பேர் கொன்ற ஹபீஸ் சையீதுக்கு கொடூர தண்டனை... பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumar  |  First Published Feb 12, 2020, 4:52 PM IST

பாகிஸ்தானில் உள்ள ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்னணி அமைப்பு. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 188 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத்.  தீவிரவாத அமைப்புகளுக்கு எல்லாம் நிதி அளித்து வந்தான். இவனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்து, இவனது தலைக்கு ரூ.71 கோடி வெகுமதி அறிவித்தது.

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்னணி அமைப்பு. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 188 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத்.  தீவிரவாத அமைப்புகளுக்கு எல்லாம் நிதி அளித்து வந்தான். இவனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்து, இவனது தலைக்கு ரூ.71 கோடி வெகுமதி அறிவித்தது.

Latest Videos

இதையும் படிங்க;-  

இந்நிலையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக ஹபிஸ் சயீத் மீது, பாகிஸ்தானின் பஞ்சாப் காவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு 23 வழக்குகள் பதிவு செய்தது. இதனையடுத்து, 2019-ல் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 வழக்குகளில் விசாரணை முடிந்ததால், அதன் தீர்ப்பை லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்ற(ஏடிசி) நீதிபதி அர்ஷத் உசேன் புட்டா கடந்த வாரம் ஒத்திவைத்திருந்தார். 

இதனிடையே, ஹபீஸ் சயீத், லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், 'பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக, தன் மீதும், கூட்டாளிகள் நான்கு பேர் மீதும் உள்ள இதர நான்கு வழக்குகளின் விசாரணையை முடிக்க வேண்டும். அதுவரை, விசாரணை முடிவடைந்த இரு வழக்குகளின் தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹபீஸ் சயீத் மனுவுக்கு அரசு பதில் அளிக்கும்படி நேட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இதையும் படிங்க;- 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய ஒரு வழக்கில் ஹபீஸ் சையீதுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

click me!