கொடூர அரக்கனாகி தினமும் 100 பேரை காவு வாங்கும் கொரோனா வைரஸ்... கொத்து கொத்தாக செத்து மடியும் சீனர்கள்..!

By vinoth kumar  |  First Published Feb 12, 2020, 2:43 PM IST

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,113-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவிய ஹூபெய் மாகாணத்தில்  எங்கு பார்த்தாலும் மக்கள் மரண பீதியில் உறைந்துள்ளனர். 

Latest Videos

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  கொடூர முகத்தை காட்டும் கொரோனா.. கொத்து கொத்தாக மடியும் சீனர்கள்.. நோய்க்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்..!

கடந்த 10-ம் தேதி சீனாவில் புதிதாக 3,536 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 849 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இவர்களில் 716 பேர் மருத்துவமனை சோதனைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தவிர நேற்று முன்தினம் மட்டும் 108 பேர் சீனாவில் இறந்துள்ளனர். இன்றைய தகவலின்படி, சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,113 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 44 ஆயிரத்து 113 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. 

இதில் ஹூபெய் மாகாணத்தில் மட்டும் 103 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நாட்டின் பிற மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாகாணத்தில் மட்டுமே தினமும் கணிசமான பேர் இறக்கின்றனர். நோயால் இறப்பவர்களின் உடல்கள் எப்படி அப்புறப்படுத்தப்படுகின்றன என்ற தகவல் வெளியாகவில்லை. உடல்களை அரசே அழிக்கிறதா அல்லது குடும்பத்தினரிடம் கொடுத்து இறுதிச் சடங்கு செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை. அது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

click me!