கொரோனா வைரஸ் வந்தும் அடங்காத சீனா ராணுவம்...!! 14 கோடி பேரின் தகவல்களை ஆட்டய போட்டு அட்ராசிட்டி...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 12, 2020, 2:18 PM IST


சீனாவின் வூகானில் தோன்றிய  கொரோனா வைரசுக்கு  இதுவரை 1, 110 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த வைரஸில் இருந்து மீளமுடியாமல் சீனா போராடி வரும் நிலையில் சீன ராணுவத்தினர் இணையதளத்தை பயன்படுத்தி அமெரிக்கர்களின் தகவல்களை  திருடியதாக  அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.  


இணையத்தைப் பயன்படுத்தி வர்த்தக திருட்டில் ஈடுபட்டதாக சீன ராணுவத்தின் மீது  அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது . கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில்  கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி  வரும் நிலையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.   உலகத்தையே அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை மிஞ்சும் அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகஉள்ளது . 

Latest Videos

சீனாவின் வூகானில் தோன்றிய  கொரோனா வைரசுக்கு  இதுவரை 1, 110 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த வைரஸில் இருந்து மீளமுடியாமல் சீனா போராடி வரும் நிலையில் சீன ராணுவத்தினர் இணையதளத்தை பயன்படுத்தி அமெரிக்கர்களின் தகவல்களை  திருடியதாக  அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.   சீனாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 4 பேர் கடந்த 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஈக்கியூபேக்சிலிருந்து சுமார் 14 கோடி அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை இணையதளம் மூலம் திருடியதாக அமெரிக்க நீதித்துறை நேற்றுமுன்தினம் குற்றம்சாட்டியது . 

அதாவது சீன ராணுவத்தின்  மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர்களான , வூஜியாங், வாங் கியான், சூகி, லியூலே ஆகிய 4 உறுப்பினர்களும் ஈகியூபேக்ஸ்  நிறுவனத்தின் இணையதளங்களில் ஊடுருவி அமெரிக்கர்களின் தகவலை திட்டியதுடன் ,  கணினி மோசடி பொருளாதார சதிதிட்டம்  உள்ளிட்டவைகளில் ஈடுபட்டதாக  அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.  இந்நிலையில்  , இணையதளம் மூலம் தகவல் திருட்டிலோ அல்லது மோசடியிலோ சீன ராணுவம் ஈடுபடவில்லை என  சீனா மறுப்பு தெரிவித்துள்ளது . 

click me!