அமேசான் நிறுவனம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது வழக்கு ஏன்? டிரம்பை சுற்றி வளைக்கும் கேள்வி கணைகள்..!!

By Thiraviaraj RMFirst Published Feb 12, 2020, 9:51 AM IST
Highlights

ஒப்பந்தத்தை ஒதுக்குவதில் தங்களை புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஜனாதிபதி டிரம்ப் செயல்பட்டார் என அமேசான் நிறுவனம் குற்றம் சாட்டி இருக்கிறது.

by: T.Balamurukan

அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமான  பென்டகனை 71 கோடியில் டிஜிட்டல்  ஒப்பந்தம் பிரபல பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி பிரபல நிறுவனமான அமேசான் அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.

 இந்த ஒப்பந்தத்தை பெற அமேசான் நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது. ஆனால், மைக்ரோசாப்ட்டுக்கு பென்டகன் ஒப்பந்தத்தை வழங்கியது. இதனால் கோபம் அடைந்த அமேசான் நிறுவனம் ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெர்றிருப்பதாகக் கூறி பென்டகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வாஷிங்டன் நகர கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக அமேசான் நிறுவனம் புதிய மனு ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஒப்பந்தத்தை ஒதுக்குவதில் தங்களை புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஜனாதிபதி டிரம்ப் செயல்பட்டார் என அமேசான் நிறுவனம் குற்றம் சாட்டி இருக்கிறது..மேலும், ஒப்பந்த நடைமுறையில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும், அமேசானை ஒழித்துக்கட்ட அவர் உத்தரவிட்டதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும். இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ராணுவ மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ், தற்போதைய ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென இந்த மனுவில் அமேசான் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த வழக்கு டிரம்ப் க்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்று காத்திருக்கிறது எதிர்கட்சி.
 

click me!