
78 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அடிமைத்தனத்தின் தடைகளை உடைத்தெறிந்தது. இன்று இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. ஒரு வல்லரசாக உருவெடுப்பதை நோக்கி வேகமாக நகர்கிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவது, வரிகள் மீதான அமெரிக்காவின் அடாவடித்தனம் என எந்த நாட்டின் அழுத்தத்தையும் இந்தியா இன்று பொறுத்துக்கொள்வது இல்லை. ஆனால், இந்தியாவின் இந்த சுயமரியாதை மனப்பான்மையை ஐரோப்பாவில் அமர்ந்திருக்கும் சில ஏகாதிபத்திய சிந்தனை கொண்ட தலைவர்களுக்கு பொறுக்கவில்லை.
காலிஸ்தான் ஆதரவாளரான ஆஸ்திரிய அரசியல்வாதி குந்தர் ஃபெஹ்லிங்கர், சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததைப்போல இந்தியாவை துண்டு துண்டாக கிழிக்க வேண்டும். பல துண்டுகளாக உடைக்க வேண்டும் என்று பேசியுள்ளார். சமூக ஊடக தளமான எக்ஸ்தளத்தில் காலிஸ்தான் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் ஃபெஹ்லிங்கர் பங்கேற்றார். அப்போது ஃபெல்லிங்கர், காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவை எப்படி பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்குவது என்பதுுறித்து விளக்கினார்.
ஃபெலிங்கர் தனது எக்ஸ்தளத்தில், ‘‘இன்று நான் எக்ஸ்தளத்துடன் காலிஸ்தானின் சுதந்திரத்தை எப்படி அடைவது? ரஷ்ய ஆதரவு பெற்ற சர்வாதிகாரி நரேந்திர மோடியின் பிடியில் இருந்து இந்திய மக்களை எப்படி விடுவிப்பது என்பது பற்றி 2 மணி நேரம் விவாதித்தேன். இன்றைய பிரிக்ஸ், இந்தியாவின் கொடூரங்கள், இனப்படுகொலை தன்மை பற்றி நானே நிறைய கற்றுக்கொண்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
குந்தர் ஃபெலிங்கர் ஒரு ஆஸ்திரிய அரசியல்வாதி. அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கானவர். அவர் நேட்டோவின் விரிவாக்கத்திற்காக ஐரோப்பிய நேட்டோ விரிவாக்கக் குழு என்ற லாபி குழுவை நடத்துகிறார். ஃபெல்லிங்கரின் லாபி குழு, ஆஸ்திரியா, கொசோவோ, உக்ரைன், ஆர்மீனியா, மோல்டோவோ மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை நேட்டோவில் சேர்ப்பதற்காக பிரச்சாரம் செய்கிறது. ஆனாலும், அவர் நேட்டோ அதிகாரி அல்ல. இராணுவக் கூட்டணியுடனும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஃபெல்லிங்கர் இந்தியா எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.