வாய்ப்பில்ல ராஜா..! இனி, அமெரிக்காவில் வாழ்க்கைத் தரம் உயரவே உயராது..! 75% மக்கள் டிரம்ப் மீது அவநம்பிக்கை..!

Published : Sep 04, 2025, 04:23 PM IST
Trump

சுருக்கம்

அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுவதாக டிரம்ப் மார்தட்டும்போது இப்போது அங்கு உண்மை நிலைமை இதுதான். அமெரிக்காவின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 37 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 125%.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நாட்டு மக்களை பணக்காரர்களாக மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். இதற்காக, உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது அவர் அதிக வரிகளை விதித்துள்ளார். ஆனால் அவர் அளித்த உறுதி நிலைகுலைந்து வருகிறது. அமெரிக்காவில் வாழ்வதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 25% மக்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் இந்த கணக்கெடுப்பு 1987-ல் தொடங்கியது. 75% மக்கள் அடுத்த தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க முடியாது என கருதுவதும் இப்போதுதான் முதல் முறை.

2020 க்கு முன்பு பல ஆண்டுகளாக, 50% முதல் 60% அமெரிக்கர்கள் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருந்தனர். சமீபத்திய கணக்கெடுப்பில் 70 சதவீதம் பேருக்கு அமெரிக்க கனவு இப்போது நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லாததாக மாறிவிட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து ஒருபோதும் அவநம்பிக்கை கொண்டதில்லை. கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், எல்லா வயதினரும், எல்லா வகுப்பினரும், எல்லாப் பகுதியினரும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.

அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுவதாக டிரம்ப் மார்தட்டும்போது இப்போது அங்கு உண்மை நிலைமை இதுதான். அமெரிக்காவின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 37 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 125%. இந்தக் கடனை அடைக்க அமெரிக்கா மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது.

வரிகள் காரணமாக வரும் நாட்களில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரம். உலகம் முழுவதில் இமிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இப்போது வரிகள் காரணமாக, வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்கள் விலை உயர்ந்ததாக மாறும்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!