67 லட்சம் போச்சு! கூகுள் ஊழியரின் உல்லாச வாழ்க்கையில் மண் அள்ளி போட்ட கிரிப்டோகரன்சி!

Published : Sep 18, 2023, 05:38 PM ISTUpdated : Sep 18, 2023, 07:40 PM IST
67 லட்சம் போச்சு! கூகுள் ஊழியரின் உல்லாச வாழ்க்கையில் மண் அள்ளி போட்ட கிரிப்டோகரன்சி!

சுருக்கம்

ரூ.67 லட்சம் பறிபோன பின்பும் தான் இன்னும் கிரிப்டோகரன்ஸிகளை முழுமையாக நம்புவதாகச் சொல்கிறார் ஈதன்.

22 வயதான, ஈதன் ங்குன்லி, என்பவர் கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக இருக்கிறார். இவர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து சுமார் 67 லட்சம் ரூபாயை இழந்ததாகக் கூறியுள்ளார். அதாவது கடன் வாங்கிய பணத்தை வைத்து கிரிப்டோகரன்சியை வாங்கி நஷ்டம் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியில் வசிக்கும் இளம் தொழில்நுட்ப வல்லுநரான ஈதன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுபற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார். பதின்ம வயதிற்கு முன்பே தனது பெற்றோரின் உதவியுடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். சிறுவயது முதலே முதலீட்டைத் தொடங்கியதால், ஒரு கோடிக்கும் அதிகமான ஓய்வூதியமும் இரண்டு வீடுகளும் அவர் பெயரில் சேர்ந்தன.

பின் நவம்பர் 2021 இல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய ஆரம்பித்த ஈதன், ஜூன் 2022 க்குள் ரூ.67 லட்சத்தை இழந்ததுவிட்டார். Shiba Inu, Dogecoin போன்ற ஆல்ட்காயின்களில் சில நூறு டாலர்களையும், பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சியில் சுமார் ₹ 33 லட்சமும் முதலீடு செய்தருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பிட்காயினின் விலை வீழ்ச்சியடைந்ததால், அவர் மேலும் ரூ.12 லட்சத்தை முதலீடு செய்தார்.

நடுவானில் திண்டாடிய அமெரிக்க போர் விமானம் திடீர் மாயம்!

பிட்காயினின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியதால், அவரிடம் உள்ள பிட்காயின்களின் மதிப்பு சுமார் 42 லட்சம் அவரை உயர்ந்தது. ஆனால் 2021 இன் இறுதியில் கிரிப்டோ சந்தை ஒரு திருப்பத்தை அடைந்தது. 2022ஆம் ஆண்டின் மத்தியில் பிட்காயினின் விலை 70 சதவீதத்திற்கு மேல் சரிந்தது.

"கிரிப்டோ சந்தை தலைகீழாக மாறியதும், எனது இழப்புகள் பெரிதாகிவிட்டன" என்று கூறும் ஈதன், "நான் இன்னும் கிரிப்டோகரன்ஸிகளை முழுமையாக நம்புகிறேன். இருப்பினும், இந்த ஆல்ட்காயின்கள் மிகவும் ஆபத்தானவை என்று நினைக்கிறேன். அவற்றிற்கு பணம் செலுத்துவதை நான் தவிர்க்கிறேன்" என்கிறார்.

தனது 67 லட்சம் ரூபாய் இழப்பில் இருந்து கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால், "உங்களிடம் உள்ள பணத்தை மட்டும் முதலீடு செய்யுங்கள். ஊகத்தின் அடிப்படையில் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்" என்று அவர் கூறுகிறார்.

35 வயதிற்குள் 5 மில்லியன் டாலர் (தோராயமாக ₹ 41 கோடி) தொகையை சேமித்துவிட்டு சீக்கிரமாக பணி ஓய்வு பெற வேண்டும் என்று இலக்கு வைத்திருப்பதாகவும் ஈதன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு; 20 பேருக்கு உடல்நலக் குறைவு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?