
இந்தோனேசியாவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற படகு, பலத்த மழை மற்றும் சூறைக்காற்றால் நிலைத்தடுமாறி கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெற்குமலேசியாவின் ஜோஹோர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் 93 பேர் பணி முடிந்தததை அடுத்து, படகு மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். Batam தீவை நோக்கிச் சென்ற படகு, பலத்த காற்றால் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி நிலைத்தடுமாறி கடலில் மூழ்கியது. இதில் தண்ணீரில் மூழ்கி 21 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், படகிலிருந்த 39 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், தண்ணீரில் தத்தளிக்கும் மற்ற தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.