
வியட்நாமில், கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாம் தலைநகர் Hanoi-யில் செயல்பட்டுவரும் கேளிக்கை விடுதியில் மதிய உணவு அருந்துவதற்காக ஏராளமானோர் வருகை தந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
தீ மளமளவென பரவி அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமானது. தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கேளிக்கை விடுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாததே விபத்து நேரிட காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வியட்நாம் பிரதமர் Nguyen Xuan, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.