
அமெரிக்க அதிபர் தேர்தலில், திடீர் திருப்பமாக வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலாரி கிளிண்டனை பின்னுக்கு தள்ளி, டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வரும் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஹிலாரியை பின்னுக்கு தள்ளி, டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப்-க்கு 46 சதவிகித ஆதரவும், ஹிலாரிக்கு 45 சதவிகித ஆதரவும் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
தற்போது ஒரு சதவிகிதம் முன்னிலையுடன் டிரம்ப் முன்னோக்கி சென்றுள்ளார். இதில் ஆண்கள் ஆதரவு டிரம்ப்-க்கும், பெண்களின் ஆதரவு ஹிலாரிக்கும் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.