Brazil Scientists : பிரான்சி நாட்டில் உள்ள இரண்டு விஞ்ஞானிகள், பூமிக்கு அடியில் உள்ள புதைபடிவ எரிபொருளை தேடிச்சென்றபோது, நமது உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய சுத்தமான எரிசக்தி வளத்தின் மிகப்பெரிய அளவிலான படிமத்தை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
பிரபல ஊடகத்தின் கூற்றுப்படி, உண்மையில் வடகிழக்கு பிரான்சின் நிலத்தடியில் புதைபடிவ எரிபொருட்களைத் தேடிக்கொண்டிருந்த விஞ்ஞானிகளான Jacques Pironon மற்றும் Phillipe De Donato ஆகியோர் தற்செயலாக "வெள்ளை ஹைட்ரஜனின்" குறிப்பிடத்தக்க அளவிலான படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். தரையில் இருந்து சுமார் 1,250 மீட்டர் உயரத்தில் ஹைட்ரஜனின் 20% அதிக செறிவு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
மேலும் அந்த இடத்தில் சுமார் 6 மில்லியன் முதல் 250 மில்லியன் மெட்ரிக் டன் வரை ஹைட்ரஜன் இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், வெள்ளை ஹைட்ரஜன் இயற்கையாகவே பூமியின் மேலோட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் இது ஒரு சுத்தமான ஆற்றலாகக் இன்றளவும் கருதப்படுகிறது.
ஆண்ட்ராய்டுக்கு ஆப்பு வைக்கப் போறது இதுதானா! சியோமியின் புதிய ஹைப்பர் ஓஎஸ் விரைவில் அறிமுகம்!
ஹைட்ரஜனின் மற்ற வடிவங்களைப் போலல்லாமல், வெள்ளை ஹைட்ரஜன் எரிக்கப்படும்போது தண்ணீரை உற்பத்தி செய்கிறது, இது மகத்தான ஆற்றலுடன், விதிவிலக்காக சுத்தமான ஆற்றல் மூலமாகும். மேலும் இதன் உற்பத்தியில் அது எந்தவித கிறீன் ஹவுஸ் வாயுக்களையும் உண்டாக்காது என்பதால் இது அந்த 'வெள்ளை ஹைட்ரஜன்' என்ற பெயரை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்களுக்கான எரிபொருள் செல்கள் அல்லது தொழில்துறை செயல்முறைகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் வெள்ளை ஹைட்ரஜனை தூய்மையான மாற்றாகப் பயன்படுத்தலாம்.
ஆகவே விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் விஞ்ஞானிகள் வெகுஜன அளவை ஒரு ஆய்வகத்தில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று நினைத்தனர். பச்சை ஹைட்ரஜன் மற்றும் சாம்பல் ஹைட்ரஜன் போன்ற வாயுவின் பிற வடிவங்கள் மின்னாற்பகுப்பு மூலம் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த எரிவாயுவின் விலை மலிவாக இருக்கும் மற்றும் இது வழக்கமான எரிபொருளுக்கு மாற்றாகவும் இருக்கும்.
எலான் மஸ்க் செய்த சம்பவம்... மரண அடி வாங்கிய எக்ஸ்! ட்விட்டரை தீர்த்துக் கட்டத்தான் இந்த பிளானா?
வெள்ளை ஹைட்ரஜனை எவ்வாறு வணிகமாக்குவது என்பதை பல நிறுவனங்கள் ஏற்கனவே ஆராய்ந்து வருகின்றன. இருப்பினும், இந்த வளத்தின் வளர்ச்சி பற்றி கண்டறிய சுமார் 200 ஆண்டுகள் ஆகலாம் என்பது தான் விசித்திரமான விஷயம். ஆனால் இந்த பெரிய அளவிலான வெள்ளை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு பல முன்னேற்றங்களை உலகின் கொண்டுவரப்போகிறது என்பது உண்மை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D