Singapore News : சிங்கப்பூரில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவருக்கு பணம் கொடுக்க மறுத்த வழக்கில் ஏற்கனவே சிறை சென்று திரும்பிய ஒருவர், ஜெயில் இருந்து வெளியே வந்த வெகு சில நாட்களில் அதே தவறை செய்துள்ளார்.
ஏற்கனவே சிறை சென்று திரும்பிய அப்துல் ரஹ்மான் ஏ கரீமின் ஏமாற்று வேலையில் இந்த முறை சிக்கியது ஒரு 35 வயதான ஆஸ்திரேலிய பாலியல் தொழிலாளி ஆவார். அந்த பெண் ஒரு மணி நேரத்திற்கு S$700 கேட்ட நிலையில்(இந்திய மதிப்பில் சுமார் 42,000 ரூபாய்). உல்லாசம் அனுபவித்துவிட்டு அந்த பெண்ணுக்கு வெறும் S$2 (இந்திய மதிப்பில் 120 ரூபாய்) நோட்டை கொடுத்து ஏமாற்றியுள்ளார் அந்த நபர். (சிங்கப்பூரில் விதிகளுக்கு உள்பட்ட பாலியல் தொழிலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது)
சிங்கப்பூர் ஊடகங்கள் அளித்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் பாலியல் சேவைகளுக்காக ஒரு மணி நேரத்திற்கு S$700 செலுத்தும் எண்ணம் இல்லாமல் நேர்மையற்ற முறையில் தனக்கான சேவைகளைப் பெற்ற குற்றச்சாட்டில் பிடிபட்டு, போலீசாரிடம் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அவருக்கு திருந்த வாய்ப்பு கொடுக்கும் காலத்தில் குற்றத்தைச் செய்ததற்காக கூடுதலாக 71 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
undefined
இந்தியாவுக்கு தாய்லாந்து கொடுத்த தீபாவளிப் பரிசு! சுற்றுலா பயணத்துக்கு விசா தேவையில்லை!
பாலியல் தொழிலாளி ஒருவரை, அவருக்குத் சேவைகளை வழங்கத் தூண்டியதற்காகவும், அதன்பிறகு பணம் செலுத்தத் தவறியதற்காகவும் அப்துல் ரஹ்மானுக்கு 32 மாதங்கள் ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அந்த ஆஸ்திரேலியா பெண்ணை whatsapp மூலம் தொடர்புகொண்டு பாலியல் சேவைகள் வழங்க அணுகியுள்ளார். அந்த பெண் கட்டணம் குறித்து பேசும்போது அதை நிராகரித்துவிட்டு தன்னுடைய இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
அந்த பெண்ணும் அங்கு வர இருவரும் உடலுறவு கொண்ட பிறகு, பாதிக்கப்பட்டவர் தனக்கு S$700 செலுத்துமாறு கோரியுள்ளார். ஆனால் அப்துல் ரஹ்மான், அவர்கள் இருவரும் கட்டணம் குறித்து பேசவே இல்லை என்றும், அதற்கு பதிலாக ஒரு S$2 நோட்டை வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனக்கு முழுத் தொகையை வழங்குமாறு வலியுறுத்திய நிலையில், அவர் மறுத்துவிட்டு வெளியேறியுள்ளார். அதன்பின், போலீசில் புகார் அளித்தார் அந்த பெண், அவர் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ப்ராஜெக்ட் எக்ஸ் - பாலியல் தொழிலாளர்களுக்கான இலாப நோக்கற்ற அமைப்பையும் தொடர்பு கொண்டுள்ளார்.
அதன் பிறகு சிங்கப்பூர் போலீசார் இந்த வழக்கில் தலையிட்டு அந்த பலே ஆசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D