2020 தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்த பின்பு, மைக் பென்ஸ் உயிரைப் காப்பாற்றிக்கொள்ள குடும்பத்தினருடன் தலைமறைவானார்.
முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி, தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கான ஆவணங்களை நேற்று (ஜூன் 5) தாக்கல் செய்துள்ளார். அடுத் தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இவர் சவாலாக இருப்பார் என்று கருதப்படுகிறது.
மைக் பென்ஸ் அமெரிக்காவின் 48வது துணை அதிபராக இருந்தவர். குடியரசுக் கட்சி வேட்பாளராக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இவர் தனது 64வது பிறந்தநாளான ஜூன் 7 அன்று, அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸில் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் தனது வேட்புமனுவை மத்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
கருக்கலைப்பு உரிமைகளை கடுமையாக எதிர்க்கும் பென்ஸ் இந்த நடைமுறைக்கு தடை விதிப்பதை ஆதரிக்கிறார். பள்ளிகளில் திருநங்கைகளுக்கு அனுமதி வழங்கும் கொள்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர். சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்புக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று வாதிட்டார். டிரம்ப் மற்றும் டிசாண்டிஸ் இருவரும் இதை எதிர்த்தனர்.
மேலும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் சொல்லிவருபவர் பென்ஸ். அதே நேரத்தில் அவரது கட்சியினர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தன்னை "ஒரு கிறிஸ்தவர், பழமைவாதி மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்" என்று சொல்லிக்கொள்ளும் பென்ஸ், அயோவா, சவுத் கரோலினா மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் போன்ற மாகாணங்களில் ஏற்கெனவே பல மாதங்களைச் செலவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம்! 80 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி
பென்ஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியானாவின் ஆளுநராகவும் இருந்தவர். 2016 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அதிபரானபோது, பென்ஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபராக, தனது பதவிக்காலம் முழுவதும் ட்ரம்பின் விசுவாசமான பாதுகாவலராக இருந்தார்.
2020 தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்த பின்பு, டிரம்பின் ஆதரவாளர்கள் பலர் “மைக் பென்ஸை தூக்கிலிடுங்கள்!” என்று கோஷமிட்டனர். பென்ஸ், தனது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உயிரைப் காப்பாற்றிக்கொள்ள சிறிது காலம் தலைமறைவானார். அதன் பிறகு, டிரம்பின் நடவடிக்கைகள் ஆபத்தானது என்றும், 2024 தேர்தலில் புதிய தலைமையை நாடு எதிர்பார்க்கிறது என்றும் பென்ஸ் கூறினார்.
டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொலைவெறி! 3 மாதமாக திட்டம் போட்டு கொலை ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்!
ஏற்கெனவே டொனால்ட் டிரம்ப், டிசாண்டிஸ், நிக்கி ஹேலி, டிம் ஸ்காட், ஆசா ஹட்சின்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசுவாமி ஆகியோர் குடியரசுக் கட்சி சார்பில் 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இப்போது மைக் பென்ஸ் அவர்களுடன் இணைகிறார். நியூ ஜெர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி, வடக்கு டகோட்டா ஆளுநர் டக் பர்கம் ஆகியோரும் அதிபர் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி... ஒருசில நாட்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம்!