ஆப்கானிஸ்தான் நாட்டில் நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும், நஸ்வான்-இ-ஃபைசாபாத் பள்ளியில் மேலும் 17 குழந்தைகளும் விஷம் குடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகளில் விஷம் குடித்த 80 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சர்-இ-புல் மாகாணத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சாரக் மாவட்டத்தில் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் அதிகாரி மொஹமத் ரஹ்மானி தெரிவித்துள்ளார். நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும், நஸ்வான்-இ-ஃபைசாபாத் பள்ளியில் மேலும் 17 குழந்தைகளும் விஷம் குடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
"இரண்டு தொடக்கப் பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகாமையில் உள்ளன. அடுத்தடுத்த மயக்கம் அடைந்த மாணவிகளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம். இப்போது அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்" என்று ரஹ்மானி கூறுகிறார்.
டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொலைவெறி! 3 மாதமாக திட்டம் போட்டு கொலை ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்!
இது தொடர்பாக விசாரணை தொடர்கிறது. ஆரம்பகட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இதற்காக மூன்றாம் நபர் ஒருவருக்கு பணம் கொடுத்ததாகத் தெரியவந்துள்ளது. சிறுமிகளுக்கு எப்படி விஷம் கொடுக்கப்பட்டது குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் அதிகாரத்திற்கு வந்தது முதல் அந்நாட்டு பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால், தாலிபன் ஆட்சி தொடங்கி பின் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான வேலைகள் மற்றும் பொது இடங்களுக்குச் செல்ல பெண்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான ஈரானில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி அந்நாட்டு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் இதேபோல விஷம் அருந்தி பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது யார், ஏதேனும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதா எனத் தெரியவில்லை.
உலகின் முக்கிய உளவுத்துறை தலைவர்கள் ரகசிய சந்திப்பு!