இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தது. புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது.இதனால் பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு அதிகரித்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் சரியான நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோடு, கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றன. இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தது.
மேலும் செய்திகளுக்கு..“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?
இதில் புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். தற்போது இம்ரான் கான் ஆளும் ஷெபாஸ் ஷெரிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
அவர் பயணித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கே திரும்பியது. விமானத்தின் விமானி, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கி உள்ளார். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ அல்லது மோசமான வானிலை காரணமாகவோ தரையிறக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !
பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி, தொழில்நுட்பக் கோளாறு காரணம் இல்லை. மோசமான வானிலை காரணமாகவே விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று விளக்கமளித்தார். பிறகு இஸ்லாமாபாத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து குஜ்ரன்வாலா சென்ற இம்ரான் கான், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்