Brain Eating Amoeba:மனித மூளையை தாக்கும் அமீபாவால் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழப்பு: பிரைன் ஈட்டிங் அமீபா?

By Pothy RajFirst Published Dec 27, 2022, 9:38 AM IST
Highlights

மனித மூளையைத் தாக்கி விரைவாகக் கொல்லும் நாக்லேரியா பவ்லேரி(naegleria fowleri) அமீபாவில் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மனித மூளையைத் தாக்கி விரைவாகக் கொல்லும் நாக்லேரியா பவ்லேரி(naegleria fowleri) அமீபாவில் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நாக்லேரியா பவ்லேரி என்பது பொதுவாக ப்ரைன் ஈட்டிங் அமீபா(brain eating amoeba) என்று அழைக்கப்படும். தென் கொரியாவில் உள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும் நாக்லேரியா பவ்லேரி அமீபாவால் ஒருவர் உயிரழந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பாம் சூறாவளி.. பொதுமக்களை மிரட்டும் கடுங்குளிர்! என்ன தான் நடக்கிறது ?

தென் கொரியாவைச் சேர்ந்த 50வயது மதிக்கத்தக்க அந்த நபர் கடந்த 4 மாதங்களாக தாய்லாந்தில் வசித்து வந்தார். கடந்த 10ம் தேதி தாய்லாந்தில்இருந்து தென் கொரியாவுக்கு  அந்த நபர் வந்தார். தென் கொரியாவுக்கு வந்த அடுத்தநாளே அந்த நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவரின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது, ரத்தமாதிரிகள் எடுத்து அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டன. அதில் அந்த நபருக்கு மூளைத் தாக்கும், பிரையன் ஈட்டிங் அமீபா தாக்கியுள்ளது தெரியவந்தது.

தென் கொரிய வரலாற்றிலேயே பிரையன் ஈட்டிங் அமீப எனப்படும் நாக்லேரியா பவ்லேரி அமீபா தாக்கியுள்ளது இதுதான் முதல் முறையாகும். இந்த அமீபாவால் இந்த நபர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்ட சில நாட்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தநபர் உயிரிழந்தார். தென் கொரியாவில் நாக்லேரியா பவ்லேரி அமீபாவால் ஒருவர் உயிரிழப்பதும் இதுதான் முதல்முறையாகும்.
கடந்த 1937ம் ஆண்டு அமெரிக்காவில் இந்த நாக்லேரியா பவ்லேரி அமீபா கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தைவானுக்கு மீண்டும் ‘டார்ச்சர்’ கொடுக்கும் சீனா: 43 போர் விமானங்களை அனுப்பி பயிற்சி

நாக்லேரியா பவ்லேரி அமீபா என்றால் என்ன

நாக்லேரியா பவ்லேரி அமீபா என்பது பொதுவாக மருத்துவ உலகில் பிரையன் ஈட்டிங் அமீபா என்று சொல்லப்படும். அதாவது இந்த அமீபா மூளையைக் தாக்கி மனிதர்களை கொல்லும். 
இந்த அமீபாக்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், நன்னீர்ஏரிகள் ஆகியவற்றில் வாழும் தன்மை கொண்டது.

இந்த அமீபா இருக்கும் தண்ணீரை மனிதர் மூக்கின் வழியாக உரிந்தாலோ அல்லது, மனிதர்களின் மூக்கின் வழியாக இந்த அமீபா சென்று மனிதர்களின் மூளை திசுக்களை பாதித்து கொல்லக்கூடியது.

கையைப் பிசையும் சீனா! இந்த ஒரு நகரில் மட்டும் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

தென் கொரியா சுகாதாரத்துறை கூற்றுப்படி, “ நாக்லேரியா பவ்லேரி அமீபா மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகக்குறைவு,ஆனால், நீர் நிலைகளில் குளிக்கும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். நாக்லேரியா பவ்லேரி அமீபாவால் கடந்த 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்தில் 381 பேர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
 

click me!