இந்தியாவுக்கு எதிரான அணி திரண்ட 28 நாடுகள்...!! அமெரிக்காவுக்கு சொன்ன அதே பதிலை சொல்லி திருப்பி அடித்த இந்தியா...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2020, 2:18 PM IST
Highlights

இச்சட்டத்தை தங்களது மாநிலத்தில் அனுமதிக்கமாட்டோம் என கேரளா மேற்கு வங்கம் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. 

இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகிவற்றை கண்டித்தும் இந்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும்  ஐரோப்பிய யூனியன்  பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள s&d கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது .  மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை எதிர்த்து  நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.  இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாணவர்கள் முதல் அரசியல் கட்சிகள்வரை  போராட்டம் நடந்து வருகின்றனர். இஸ்லாமியர்களை குறிவைத்தும்  அவர்களை தனிமைப்படுத்தும் நோக்கில் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய அரசின் மீது போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.  இச்சட்டத்தை தங்களது மாநிலத்தில் அனுமதிக்கமாட்டோம் என கேரளா மேற்கு வங்கம் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. 

இந்தியாவில் இச்சட்டத்தை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்கள்  சர்வதேச நாடுகளின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது .  இதன் ஒரு பகுதியாக இந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச்  சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு  எதிராக ,  ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில்  இடம்பெற்றுள்ள அமைப்புகளின் சார்பில்  தீர்மானம் கொண்டு வர உள்ளது.   ஐரோப்பிய யூனியனில் ,  பிரான்ஸ் ,  ஜெர்மனி ,அயர்லாந்து  ,  இத்தாலி , ஸ்பெயின் ,  ஸ்வீடன்,  இங்கிலாந்து ,  டென்மார்க் ,  பல்கேரியா ,  உள்ளிட்ட 28 க்கும் அதிகமான நாடுகள் இடம்பெற்றுள்ளன  ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 751 எம்பிக்கள் உள்ளனர் இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து ஆறு குழுக்கள் இணைந்து தீர்மானம் கொண்டு  வந்துள்ளனர் ,  இந்த ஆறு குழுக்களில் மொத்தம் 626 எம்பிக்கள் உள்ளனர் ,  ஆகவே அவர்கள் கொண்டுவரும் தீர்மானம்  பெரும்பான்மையுடன் நிறைவேறும் என தெரிகிறது .  அவர்கள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் விவரம் :-

 

இந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை மற்றும்  தேசிய மக்கள் தொகை பதிவேடு  சட்டம் இந்திய குடியுரிமை முறையில் மிகவும் அபாயகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் இதனால் உலகிலேயே அதிக நாடு இல்லாத அதாவது அகதிகளைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் , சி ஏ ஏ என்ற குடிமக்கள் பதிவேட்டு முறையை எதிர்த்து போராடும் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக அரசும் அந்நாட்டு  பாதுகாப்பு படையினரும் மக்களை மிரட்டி வருகின்றனர் என தீர்மானத்தில் ஐயோப்பிய யூனியன் பாராளுமன்றம்  குற்றம்சாட்டியுள்ளது.   இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ,  இது இந்தியாவின் உள்விவகாரம் இதில் தலையிட வெளிநாட்டு அமைப்புகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை  எனக் கூறியுள்ளார் .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபில் இந்தியாவில் கொண்டுவந்துள்ள புதிய இந்திய குடிமக்கள் பதிவேடு விவகாரம் ஐரோப்பிய யூனியனில் விவாதிக்கும் அளவுக்கு வந்துள்ளது,   இதை பிஜேபி சர்வதேச பிரச்சினையாக்கி உள்ளது என தெரிவித்துள்ளார் .
 

click me!